சிவஞானபோத விருத்தம்

சிவஞானபோத விருத்தம் என்னும் நூல் கண்ணுடைய வள்ளல் என்பவரால் 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இது 12 விருத்தங்களை மட்டும் கொண்ட நூல். ‘ஸ்ரீமது வள்ளலார் அருளிய திருவிருத்தம்’ என்று காழித் தாண்டவராயர் தம் திருவாசக உரையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த உரையில் சிவஞானபோதம் 12 நூற்பாக்களை எழுதி அவற்றிற்கு விளக்கம் போல ஈடாக அமைந்துள்ள இந்தப் 12 விருத்தங்கள் அவற்றுடன் தரப்பட்டுள்ளன.

  • இந்த நூலின் முதல் பாடல் [1] [2]

பதி பசு பாசம் எனத் தெரிந்த மூன்றின்

பதியாவது ஒருபடிப் பட்டுள்ள சகத்திற்கு

முதுமறை நூல் அவன் அவள் அது என்று ஓதும்

மூ வகையும் செய்ய ஒரு முதல் உண்டாகும்

அது பதி ஆம் சுகம் தன்னை அழித்துக் காத்திட்டு

ஆக்குதலால் அவன் அரனே ஆவன் மற்று

விதி தனையும் அரி தனையும் காட்டி எல்லாம்

விளைந்து அழியக் கண்டு நிற்பன் விமலன் தானே.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. இது சிவஞானபோதம் முதல் பாடலுக்கு ஈடான பாடல் ஆகும்.
  2. பாடல் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவஞானபோத_விருத்தம்&oldid=1308364" இலிருந்து மீள்விக்கப்பட்டது