கண்ணுடைய வள்ளல்

கண்ணுடைய வள்ளல் என்பவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நூலாசிரியர். புதிய சைவ மரபைத் தோற்றுவித்தவர். 15 ஆம் நூற்றாண்டில் ‘வள்ளல்’ என்றாலே இவரைக் குறிக்கும் அளவுக்குப் புகழ் பெற்று வாழ்ந்தவர்.

இவர் தொடக்கத்தில் சம்பந்தர் பரம்பரையில் சம்பந்த சரணாலயர் என்னும் பெயருடன் விளங்கினார். அப்போது இவரது குரு சம்பந்த முனிவர். பின்னர் தன் குருவை மறந்து, வள்ளலார் மரபு என்னும் ஆசாரிய பீடம் நிறுவி அதன் தலைவர் ஆனார். சம்பந்தர் பரம்பரை சைவசித்தாந்த நெறியைப் பின்பற்றுவது. வள்ளலார் மரபு ஐக்கியவாத சமயம் என்னும் புதிய மரபைப் பின்பற்றுவது.[1]

‘கண்ணுடையார்’ என்னும் தொடர் சம்பந்தர் தேவாரத்தில் உள்ளது.[2] திருஞான சம்பந்தரையே குருவாக மாற்றிக்கொண்ட இவர் ‘கண்ணுடைய திருஞான சம்பந்தர்’ எனத் தன் பெயரையே மாற்றிக்கொண்டார்.

நூல்கள்

தொகு

கண்ணுடைய வள்ளல் பல நூல்களை இயற்றியுள்ளார். அவை ஒழிவிலொடுக்கம், சிவஞானபோத விருத்தம், திருக்களிற்றுப்படியார் அனுபூதி உரை, தேவார உரை, நியதிப் பயன், பஞ்சமலக் கழற்றி, பஞ்சாக்கர மாலை, பிரசாத தீபம், பேரானந்த சித்தியார், மாயாப் பிரலாபம் ஆகும்.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. சம்பந்தர் வேறு. சம்பந்த முனிவர் வேறு.
  2. "நாகேச்சுரம் கண்ணினால் காண வல்லவராவர் கண்ணுடையார்களே" - திருநாகேச்சுரப் பதிகம் 2759.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணுடைய_வள்ளல்&oldid=2718265" இலிருந்து மீள்விக்கப்பட்டது