சிவஞான தீபம்

சிவஞானதீபம் என்னும் நூல் 16 ஆம் சூற்றாண்டில் ரேவணசித்தர் என்பவரால் எழுதப்பட்டது. இதில் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் 174 உள்ளன. இது சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ஆகியவற்றைப் பின்பற்றிய வழிநூல். தீக்கை, திருநீறு, ஐந்தெழுத்தின் தத்துவம், பூசை, சிவநடனம் முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.

  • இந்நூலின் பாடல் (எடுத்துக்காட்டு)

உகைத்தாடும் கயிறகன்ற ஊசல் போலும்

உலவாது திரிவொழிந்த கறங்கே போலும்

மிசைத்தாடும் விசையறுபம் பரமே போலும்

விளக்கொளிசேர் தாழ்ந்தமணி நாவே போலும்

செகத்தாய சித்திரத்தின் நிலையே போலும்

சிவபோகத் தடங்கியுயிர் செயலொன் றின்றி

அகத்தாய நம்போதப் பற்று நீக்கி

அசைவறநிற் பதுபரமா னந்த மாமே [1]

பரமானந்தம் எப்படி இருக்கும் என இந்தப் பாடல் கூறுகிறது. கயிற்றைக் கழற்றிவிட்ட ஊஞ்சல் போலவும், வானத்தில் பறக்காமல் கிடக்கும் பட்டம் போலவும், சுழலாமல் கிடக்கும் பம்பரம் போலவும், விளக்கில் தொங்கிக்கொண்டு ஆடாமல் இருக்கும் மணியின் நாக்கு போலவும், சுவரில் எழுதப்பட்டிருக்கும் சித்திரம் போலவும் நம் உயிர் சிவபோகத்தில் அடங்கிக் கிடப்பதுதான் பரமானந்தம்.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

தொகு
  1. பாடல் 44
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவஞான_தீபம்&oldid=1336380" இலிருந்து மீள்விக்கப்பட்டது