ரேவணசித்தர்

ரேவணசித்தர் [1][2][3] என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர். அகராதி நிகண்டு என்னும் நூலை உருவாக்கியவர். சிவஞான தீபம் என்னும் நூலும் இவரால் எழுதப்பட்டது. ‘அகராதி’ என்னும் சொல்லை முதன்முதலில் கையாண்டவர். இந்த அகராதி நிகண்டில் இவரது பெயர் ‘சிதம்பர ரேவண சித்தன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிதம்பரம் என்பது தந்தையின் பெயர். பட்டீச்சுரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர்.

நிகண்டுப் பாடல்கள் எதுகையை முன்னிறுத்தித் தொகுக்கப்பட்டவை. அகராதி மோனையை முன்னிறுத்தி தமிழ் நெடுங்கணக்கு அகரவரிசையில் தொகுக்கப்படுகிறது. தொல்காப்பியர் இதனை உரிச்சொல் எனக் குறிப்பிடுகிறார்.

பட்டீச்சுரத்துச் செழுந்தமிழ்ப் புராணம், திருவலஞ்சுழிவாணர் புராணம், திருமேற்றளிச் செழுந்தமிழ்ப் புராணம் ஆகிய நூல்களும் இவரால் பாடப்பட்டவை என்பது இவரது அகராதி நூலில் காணப்படும் செய்தி.[4] இவர் சமாதி தாராசுரம் கோயிலுக்கு மேற்புறம் ஒட்டக்கூத்தர் சமாதியுடன் ரேவணசித்தர் சமாதியும் உள்ளது.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. மாடுகள் கத்துவதை ‘ரேவணம்’ என்பர். இவரது குரல் மாட்டுக்குரல் போல் இருந்திருக்கலாம் என்பது மு. அருணாசலம் கருத்து.
  3. இது ஒலிக்குறிப்புப் பெயர் ஆகையால் 'இரேவணசித்தர்' என எழுத இயலவில்லை.
  4. இவை இப்போது கிடைக்கவில்லை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவணசித்தர்&oldid=2731803" இலிருந்து மீள்விக்கப்பட்டது