சிவநாதன் கிசோர்
சிவநாதன் கிசோர் (Sivanathan Kisshor, பிறப்பு: 12 மே 1962) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
சிவநாதன் கிசோர் Sivanathan Kisshor | |
---|---|
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2004–2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 12, 1962 |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
2004 ஆம் ஆண்டில் கிசோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளராக விடுதலைப் புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஏப்ரல் 2004 தேர்தலில் கிசோர் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு 17,653 வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] 2010 தேர்தலில் ததேகூ கிசோரைத் தனது வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யவில்லை.[3] அதன் பின்னர் கிசோர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து 2010 தேர்தலில் போட்டியிட்டு 1,262 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[4] 2015 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (3 ஏப்ரல் 2010). "TAMIL NATIONAL ALLIANCE ENTERS CRITICAL THIRD PHASE -2". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/print/index.php/opinion1/7441.html.
- ↑ "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-19.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (17 ஏப்ரல் 2010). "T.N.A. PERFORMS CREDITABLY IN PARLIAMENTARY ELECTIONS". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8325.html.
- ↑ "Parliamentary General Election - 2010 Trincomalee Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2015-09-19.
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.