சிவநெறிப் பிரகாச உரை

சிவக்கொழுந்து தேசிகர் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த சிவாக்கிர யோகிகளின் மாணாக்கர் நந்தி சிவாக்கிர யோகிகள். ஆசிரியர் சிவாக்கிர யோகிகள் எழுதிய சிவநெறிப் பிரகாசம் என்னும் நூலுக்கு அவரது மாணாக்கர் நந்தி சிவாக்கிர யோகிகள் எழுதிய உரை சிவநெறிப் பிரகாச உரை. இவரே ஆதியில் அருள்நந்தி தேவர் என வழங்கப்பட்டார். இவர்களது காலம் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.

உரையின் பாங்கு

தொகு
  • அத்துவாக்கங்கள் ஆறு. கலை, மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம் என்பன அவை. இவை இந்த உரையில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.
  • ‘முக்கியாத்துவம்’ என்னும் புதிய சொல் ‘சிவாகமத்தின் முதன்மையான பொருள்கள்’ என்னும் பொருளில் இந்நூலில் முதன்முதலாக வருகிறது.
  • ஆசிரியரின் மகள் ‘சிவானந்த நாச்சியார்’. இவரை உரையில் குறிப்பிடுகிறார்.

உரையின் இறுதியில் உள்ள உரையாசிரியரின் பாடல்:

தந்தை சிவக்கொழுந்து தாள்பணிந்தே தான்தனுசை
எந்தை சிவநெறிஇங்(கு) ஏதென்னச் – சிந்தையால்
தேர்ந்து சிவாகமத்தைச் சேர்த்(து)ஆ யிரமதனை
ஒர்ந்திடச்சொன் னான்தமிழால் உற்று.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவநெறிப்_பிரகாச_உரை&oldid=1881296" இலிருந்து மீள்விக்கப்பட்டது