சிவன் கோயில்கள்

(சிவன்கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிவாலயங்கள் என்பவை சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும்.[1] இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும், இலங்கை, நேபாளம், கம்போடியா என பல உலக நாடுகளிலும் சிவாலயங்கள் அமைந்துள்ளன. பெரும் பாலானான சிவாலயங்களில் மூலவராக சிவலிங்கமும், பிரகாரங்களில் பிற தெய்வ சன்னதிகளும் உள்ளன.

வேறு பெயர்கள்

தொகு
  • சிவாலயம் - சிவ + ஆலயம்[2]
  • சிவப்பதிகள் - சிவ + பதிகள் -
  • சிவத் தலங்கள்
  • சிவன் கோயில்கள்[3]

தேவகிருதம், தேவாகாரம், தேவாயதனம், தேவாலயம், தேவகுலம், தேவமந்திரம், தேவபவனம், தேவஸ்தானம், தேவவேஸ்மம், சைத்தியம், சேத்திரம் என இறைவனின் இடம் என்று பொருள் தரும் பலவகைப் பெயர்களும் சிவாலயங்களுக்கு வழங்கப்படுகின்றன.

சிவாலய வகைகள்

தொகு

சிவாலயங்களை எண்ணிக்கை, வழிபட்டவர்கள், மூலவரின் சிறப்பு, தலவரலாறு, தலத்தின் மீது பாடப்பட்ட பாடல்கள் என பலவற்றினை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துகின்றனர்.

சிவாலய அமைப்பு

தொகு
 
நந்தமேடு வீரபாண்டீசுவரர் கோவில் அமைப்பு

விநாயகப் பெருமானை வணங்கிய பின்பு நந்தி தேவரிடம் சென்று மூலவரை தரிசிக்க அனுமதி தர வேண்ட வேண்டும். அதன் பிறகு மூலவரையும், அம்பாளையும் வணங்க வேண்டும். பின்பு கோஷ்டத்தில் உள்ள நடராஜர், திருமால், பிரம்மா போன்றோரை வணங்க வேண்டும். கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை வணங்கும் போது சண்டிகேசுவரை சிவாலயத்தில் எவ்வித பொருட்களையும் எடுத்து செல்லவில்லையென கூறி வணங்க வேண்டும்.

பின்பு பரிவார தேவதைகளான வள்ளி தெய்வானை முருகன், நடராஜர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி, நவகிரத்தையும் வணங்கலாம். சிவாலயங்களில் அனைத்து தெய்வங்களையும் வணங்கியபின்பு சிறிது நேரம் அமர்ந்து செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

சிவாலயத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்பு அவர் பக்தர்களின் துணைக்காக சிவகணங்களை உடன் அனுப்பவதாகும். இவ்வாறு அமர்ந்து செல்லும் போது சிவகணங்கள் மீண்டும் சிவாலயத்திற்கு சென்று விடுகின்றன என்பதும் நம்பிக்கையாகும். ஏதேனும் வேலையாக அமராமல் சென்றால் சிவகணங்கள் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வரும் என்றும் நம்புகின்றனர்.

சிவாலய வழிபாட்டு முறை

தொகு

சிவாலயங்களின் கோபுரத்தினை கடந்து சென்றதும், அங்கிருக்கும் கொடி மரத்தினை வணங்க வேண்டும். அதன் அருகே இருக்கும் பலிபீடத்தினை வணங்கி, அதில் தீய எண்ணங்களை பலியிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கன்னி விநாயகரை வணங்க வேண்டும். தோப்புக்கரணமும், தலையில் குட்டியும் வணக்கம் செய்யலாம்.

விநாயகப் பெருமானை வணங்கிய பின்பு நந்தி தேவரிடம் சென்று மூலவரை தரிசிக்க அனுமதி தர வேண்ட வேண்டும். அதன் பிறகு மூலவரையும், அம்பாளையும் வணங்க வேண்டும். பின்பு கோஷ்டத்தில் உள்ள நடராஜர், திருமால்,பிரம்மா போன்றோரை வணங்க வேண்டும். கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை வணங்கும் போது சண்டிகேசுவரை சிவாலயத்தில் எவ்வித பொருட்களையும் எடுத்து செல்லவில்லையென கூறி வணங்க வேண்டும்.

பின்பு பரிவார தேவதைகளான வள்ளி தெய்வானைமுருகன், நடராஜர் மற்றும் இதர தெய்வங்களை வணங்கி, நவகிரத்தையும் வணங்கலாம். சிவாலயங்களில் அனைத்து தெய்வங்களையும் வணங்கியபின்பு சிறிது நேரம் அமர்ந்து செல்வதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

சிவாலயத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்பு அவர் பக்தர்களின் துணைக்காக சிவகணங்களை உடன் அனுப்பவதாகும். இவ்வாறு அமர்ந்து செல்லும் போது சிவகணங்கள் மீண்டும் சிவாலயத்திற்கு சென்று விடுகின்றன என்பதும் நம்பிக்கையாகும். ஏதேனும் வேலையாக அமராமல் சென்றால் சிவகணங்கள் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வரும் என்றும் நம்புகின்றனர்.

எண்ணிக்கை

தொகு

சிவன் கோவில்கள் 270 என்று தொகுத்துக் கூறி அவை எந்த எந்த நாடுகளில் உள்ளன என்று விளக்கும் பழம் பாடல் ஒன்று உள்ளது.

வடநாட்டில் கயிலாயம் முதல் 5
துளு நாட்டில் 1
தொண்டை நாட்டில் 32
நடு நாட்டில் 22
பொன்னி பாயும் சோழநாட்டில் 190
மலைநாட்டில் 1
கொங்கு நாட்டில் 7
சிங்களத்தில் 2
வையை பாயும் பாண்டியனின் தமிழ் நாட்டில் 7

என்று குறிப்பிடும் வகையில் அவை இருந்தன. [4] தென்கயிலாயம் என்பது குற்றாலம் [5]

ஆதாரங்கள்

தொகு
  1. https://ta.wiktionary.org/s/79jj
  2. ஆனந்த விகடன் - 'குரு' பூஜித்த சிவாலயம்! குரு பரிகாரத் தலம் - வி. ராம்ஜி - திருவலிதாயம் 15/05/2014
  3. சிமென்ட் இல்லாமலே ஒரு சிவன் கோயில்! ஆனந்த விகடன் - 29 Feb, 2012
  4. நூல்: தனிப்பாடல் திரட்டு,பக்கம் 148
  5.  துங்கவட கயிலாய முதலாம் ஐந்து
    துளுவொன்று தொண்டை வளநாட் டெண்ணான்கு
    தங்குநடு நாட்டி ருபத்தி ரண்டு பொன்னித்
    தலநூற்றுத் தொண்ணூறு மலைநாட் டொன்று
    கொங்கேழு சிங்களத்தில் இரண்டு வையைக்
    குளிர் தமிழ் நாட்டி ரேழுமெலாஞ் சூழச்
    செங்கையார் தலம் இருநூற் றெழுபா நான்கில்
    தென்பாகம் கயிலாயந் திருக் குற்றாலம் 5

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவன்_கோயில்கள்&oldid=4082709" இலிருந்து மீள்விக்கப்பட்டது