சிவராசன்

சிவராசன் (இ. 1991) ராஜீவ் காந்தி படுகொலையில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் குழுவிற்கு தலைமை தாங்கியவர்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

இவரது இயற்பெயர் பாக்கியசந்திரன். யாழ்ப்பாணத்தில் உடிப்பிடியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆங்கில வழிக்கல்வி பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியராக இருந்தவர். இவரின் சகோதரர் பெயர் ரவிச்சந்திரன். ரவிச்சந்திரன் புலிகள் இயக்க மாணவர் பிரிவில் செயல்பட்டுக் கொண்டு இருந்தவர். ரவிச்சந்திரனின் மற்றொரு பெயர் தில்லை அம்பலம் சுதந்திர ராஜா. இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த போது அவர்களால் இந்த ராஜா பிடிபட்டு சிறைக்குச் சென்றவர். சிவராசன் இலங்கையின் மின்வாரியத்தில் மட்டக்களப்பில் பணிபுரிந்த அரசு ஊழியர். முதலில் தான் ஈடுபட்டிருந்த டெலோ இயக்கத்தில் இருந்து விலகி விடுதலைப்புலிகளின் இயக்கத்திற்கு வந்தவர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பங்குதொகு

சிவராசன் 1987இல் இலங்கை ராணுவத்தினருடன் போரிட்ட போது தனது ஒரு கண்ணை இழந்தார். இதன் பின்னால் ”ஒற்றைக்கண் சிவராசன்” என்றும் பாக்கியசந்திரனின் சுருக்கமான பாகி அண்ணா என்றும் புலிகள் இயக்கத்தில் அழைக்கப்பட்டார். புலனாய்வு பக்கங்களில் சிவராசன் என்ற ரகுவரன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ பயிற்சி பெற்று பின்னாளில் பொட்டு அம்மான் தலைமையில் இருந்த உளவுப் பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ராஜீவ் படுகொலைதொகு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சதி திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் இந்த சிவராசன் ஆவார். ராஜீவ் காந்தி படுகொலையில் இவருடன் இணைத்து அறியப்பட்டவர்களில் தனுவும், சுபா சுந்தரமும்[1][2] முக்கியமானவர்களாவர். ராஜீவ் காந்தி படுகொலையில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட தனு என்பவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விடுதலைப் புலிகளின் "மண் மீட்பிற்கே உயிர்நீத்த மாவீரர்களின் குறிப்பேடு" என்ற புத்தகம் உதவியது.

ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு ஒத்திகை என்பதாக தன்னை ஒரு பத்திரிக்கையாளராக உருமாற்றிக்கொண்டிருந்த சிவராசன், விபி சிங் (1991 மே 7) கூட்டத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருந்ததை பிறகு பார்த்து கண்டு பிடித்தனர். காரணம் சென்னையில் நடந்த அந்தக் கூட்டத்தை ஒரு பத்திரிக்கையாளர் முழு படமாக எடுத்து இருந்தார்.

மேற்கோள்கள்தொகு

  1. ராஜிவ் படுகொலை – மர்மம் விலகும் நேரம்
  2. விடுதலை புலிகளையும் ராஜிவ் கொலையையும் தொடர்பு படுத்திய தடயங்கள், சாட்சிகள்-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவராசன்&oldid=2717625" இருந்து மீள்விக்கப்பட்டது