சிவ பிருந்தாதேவி
சிவ பிருந்தாதேவி' (Siva Brindadevi) (1927 – 1998) அன்னை சாயிமாதாபிருந்தாதேவி என அறியப்படும் இவர் ஒரு ஆன்மிகவாதி மற்றும் சமூக சேவகரும் ஆவார்.[1][2]
ஆதீனம்
தொகுஇவர் புதுக்கோட்டையில் திலகவதியார் திருவருள் ஆதீனம் நிறுவி அதில் ஆதீனமாகவும் செயல்பட்டார்.[3][4][5][6]
பிறப்பு
தொகுசாயிமாதா சிவபிருந்தா தேவி தமிழ்நாட்டில்புதுக்கோட்டையில் நட்டுவனார்- நல்லம்மாளுக்கு மகளாக 1927இல் பிறந்தார்.
படிப்பு
தொகுஇவர், திருக்கோகர்ணம் ஸ்டேட் செகண்டரி பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்தார். அது முதலாக கதை, கவிதைகள் எழுதினார்.
ஆன்மீக ஈடுபாடு
தொகுபுதுக்கோட்டை ராணியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான், ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டது. பிறகு பிருந்தவனம் எனும் தம் பெயரைப் பிருந்தாவனதேவி என மாற்றினார். நாளடைவில் புதுக்கோட்டையிலுள்ள திருவருள் மட ஆதீன கர்த்தரானார்.
தேசப்பற்று
தொகு1948இல் காந்தி இறந்தபோது அவரைப் பற்றி தம் முதல் கவிதையை எழுதினார். க. முத்துசாமி வல்லத்தரசு தலைமையில் நடந்த விழாவில் காந்தி,நேருவின் தியாகத்தைப் பற்றி பேசினார்.
மறைவு
தொகு27 நவம்பர் 1998இல் இயற்கையெய்தினார்.
உசாத்துணை
தொகுபைம்பொழில் மீரான், தலைநிமிர்ந்த தமிழச்சிகள், சூலை 2007
மேற்கோள்கள்
தொகு- ↑ "French tourists visit Adheenam". The Hindu. Archived from the original on 2013-08-04. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.
- ↑ "Tributes paid to Siva Brindadevi". The Hindu. Archived from the original on 2011-09-14. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.
- ↑ "இந்தியாவின் முதல் பெண் ஆதீனத்தில் குரு பூஜை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.
- ↑ "முதல் பெண் ஆதீன அதிஷ்டானத்தில் குருபூஜை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.
- ↑ "Scholar, social worker, musician honoured". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.
- ↑ "திலகவதியார் ஆதீனத்தில் ஐம்பெரும் விழா". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2013.