சி-டோன்யி திருவிழா

சி-டோன்யி என்பது வடகிழக்கு இந்தியாவில் அருணாச்சல பிரதேசத்தின் டாகின் பழங்குடியினரிடையே கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாவாகும். இது முக்கியமாக, மாவட்டத் தலைமையகமான டபோரிஜோவிற்கு அருகிலுள்ள நகரமான டம்போரிஜோ மற்றும் தலிஹா, சியூம் பகுதிகள், மாநிலத் தலைநகர் இட்டாநகரிலும் கொண்டாடப்படுகிறது, மற்ற இடங்களிலும் இது அங்குள்ள தாகின் சமூகத்தால் கொண்டாடப்படுகிறது. இந்த விழா முதன்முதலில் 1975 ஆம் ஆண்டில் சி-டோனியின் தொடக்கத்தில் முக்கிய முன்னோடியாக இருந்த லேட் டாடர் உலி என்பவரால் கருத்தாக்கப்பட்டது. பொறுப்புகளை வகித்த மற்ற உறுப்பினர்கள் லேட் தடக் துலோம் மற்றும் போபக் பாகே ஆவர். அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அதே ஆண்டில் திருவிழா கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், டாகின் பழங்குடியினரால் சி-டோன்யி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சடங்குக்கு தலைமை தாங்கிய முதல் நபர் துபி நிகாம் ஆவார். மேலும் சி- டோன்யி என்ற பெயரை திரு பிங்சா கோடாக் பரிந்துரைத்தார்.

கால அளவு

தொகு

இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 4 முதல் 6 வரை கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது கடவுள் சி (பூமியின் அடு சி-ஆண் வடிவம் கொண்ட தெய்வம்) மற்றும் டோன்யி (ஆயு டோன்யி -சூரியனின் பெண் வடிவம் கொண்ட தெய்வம்) அவர்களின் ஆன்மீக வடிவத்தில் வணங்கப்படுகின்றன.

சடங்குகள்

தொகு

நிபு அல்லது உள்ளூர் பூசாரி, குறிப்பாக சி மற்றும் டோனி ஆகிய தெய்வங்களுக்கு உயி (வாய்மொழி பிரார்த்தனைகளின் ஒரு வடிவம்) பாடுவதன் மூலம் திருவிழாவிற்குத் தலைமை தாங்குகிறார். ஒட்டுமொத்த சமூகத்தின் செழிப்புக்காகவும், சமூக மக்களுக்கு அழிவுகளை உருவாக்கும் தீய சக்திகளைத் தடுக்கவும், தரமான பயிர்கள் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கவும் வேண்டுவார்கள்.

செஹ்து என்பது மூங்கில் மற்றும் மரத்தால் கட்டப்பட்ட ஒரு தளமாகும். தேவையான இலைகள் மற்றும் மூங்கில் பொருட்களால் இது அலங்கரிக்கப்படுகிறது. கீர்த்தனைகளும், பக்திப்பாடல்களும் பாடப்பட்டு, காயல் பலியும் இங்கு செய்யப்படுகிறது.

இதன் மற்றொரு முக்கிய கூறு நடனம் ஆகும். சுங்னே, கோன்யி போகர், ரியாபு மற்றும் டாகர் கெனே போன்ற நடனங்கள் ஆண்கள் மற்றும் பெண்களின் குழுக்களால் அவர்களின் பாரம்பரிய உடைகள் மற்றும் ஆபரணங்களுடன் நிகழ்த்தப்படுகின்றன. ஆவிகளை வரவேற்கும் வகையில் சிறப்பாகச் செய்யப்படும் ஹோயி பேனம் நிகழ்ச்சியை வயதான ஆண்கள் நடத்துகிறார்கள்.

அடிப்படையில் எட்யே எனும், அரிசியாலான பீர் பானம் மற்றும் அரிசி மாவு கொண்டு செய்யப்பட்ட ஒரு பசையானது கொண்டாட்டத்தில் மக்களின் முகத்தில் தடவப்படுகிறது.

அதே நேரத்தில் கொண்டாட்டம் வாரக்கணக்கில் தொடர்வதால் திருவிழாவின் முடிவைக் குறிப்பதற்காக தெய்வங்களுக்காக மிதுன் காயல் பலியிடப்படுகிறது. . [1] [2] [3] [4] [5]

சொற்பிறப்பியல்

தொகு

இது டாகினால் பின்பற்றப்படும் டோன்யி-போலோயிசத்தின் முக்கிய தெய்வங்களான சி ( பூமி ) மற்றும் டோன்யி ( சூரியன் ) ஆகியோரை வணங்குவதற்காகக் கொண்டாடப்படுகிறது. [1] சி தெய்வத்தின் ஆண் ஆவி வடிவமும், டோன்யி தெய்வத்தின் பெண் ஆவி வடிவமும் வழிபடப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pakba, Tagia (5 January 2017). "'Si-Donyi' – the festival of Arunachal Pradesh". The Arunachal Times. The Arunachal Times Publications Pvt. Ltd. பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
  2. "'Si Donyi Festival: Tagin Tribe - Arunachal Pradesh". Greener Pastures. First Choice. Archived from the original on 25 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
  3. "Si-Donyi Festival to be Celebrated from January 4". Eclectic NorthEast. 15 December 2016. Archived from the original on 25 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
  4. "Si-Donyi Festival". India's North East. Rongjeng Technologies Pvt. Ltd. 10 April 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
  5. "Si-Donyi Celebrated with Fervor in Arunachal". Northeast Today. 7 January 2016. Archived from the original on 25 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி-டோன்யி_திருவிழா&oldid=3875148" இலிருந்து மீள்விக்கப்பட்டது