சி. ஆர். பாசப்பா
சி. ஆர். பாசப்பா (C. R. Basappa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவையில் திப்தூர் மக்களவைத் தொகுதியை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3] இந்திய நாடாளுமன்றத்தில் காங்கிரசு கட்சி உறுப்பினராகச் செயல்பட்டார்.[4]
சி. ஆர். பாசப்பா C. R. Basappa | |
---|---|
மைசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1948–1950 | |
மைசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1950–1952 | |
மக்களவை (இந்தியா) உறுப்பினர் | |
பதவியில் 1952–1957 | |
தொகுதி | திப்தூர் மக்களவைத் தொகுதி |
பதவியில் 5 ஏப்ரல் 1957 – 31 மார்ச்சு 1962 | |
தொகுதி | திப்தூர் மக்களவைத் தொகுதி |
பதவியில் 2 ஏப்ரல் 1962 – 3 மார்ச்சு 1967 | |
தொகுதி | திப்தூர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 ஏப்ரல் 1913 |
இறப்பு | 29 சனவரி 1991 | (அகவை 77)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மூலம்: [1] |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசி.ஆர்.பாசப்பா 1913 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி மைசூரில் உள்ள சிக்கனயா கங்கள்ளியில் (தற்போதைய கர்நாடகாவின் சிக்கனயா கங்கள்ளியில்) பிறந்தார். இளங்கலை பட்டம், இளங்கல்வியியல் பட்டம், இளம் சட்டவியல் பட்டம் ஆகியவற்றை பெற்றார். தும்கூர் அரசு உயர்நிலைப் பள்ளி, மைசூர் மகாராசா கல்லூரி, மும்பை அரசினர் சட்டக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் பாசப்பா கல்வி கற்றார்.
சிஆர் பாசப்பா 1937 ஆம் ஆண்டில் புட்டத்தாயம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு 3 மகன்களும் 1 மகளும் உள்ளனர்.[4]
பதவிகள்
தொகு# | தொடக்கம் | முடிவு | பதவி |
---|---|---|---|
1. | 1948 | 1950 | மைசூர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் |
2. | 1950 | 1952 | மைசூர் சட்டமன்ற உறுப்பினர் |
3. | 1952 | 1957 | நாடாளுமன்ற உறுப்பினர், முதலாவது மக்களவை, திப்தூர் தொகுதி |
4. | 1957 | 1962 | நாடாளுமன்ற உறுப்பினர், இரண்டாவது மக்களவை, திப்தூர் தொகுதி |
5. | 1962 | 1967 | நாடாளுமன்ற உறுப்பினர், மூன்றாவது மக்களவை திப்தூர் தொகுதி |
இறப்பு
தொகுசி.ஆர்.பாசப்பா 29 சனவரி 1991 அன்று தனது 77 ஆவது வயதில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha (1962). Parliament of India, Third Lok Sabha: Who's who 1962. Lok Sabha Secretariat. p. 39. பார்க்கப்பட்ட நாள் 18 December 2020.
- ↑ Sir Stanley Reed (1965). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. p. 242. பார்க்கப்பட்ட நாள் 18 December 2020.
- ↑ Lok Sabha Debates. India. Parliament. Lok Sabha. 11 August 1958. p. 975.
- ↑ 4.0 4.1 "Members Bioprofile". loksabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-06.
- ↑ Sabha, India Parliament Lok (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat.