சி. எம். முத்து

தமிழ் எழுத்தாளர்

சி. எம். முத்து என்றழைக்கப்படுகின்ற சி. மாரிமுத்து தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார்.

பிறப்பு

தொகு

இவர் தஞ்சாவூரை அடுத்துள்ள இடையிருப்பு என்னும் சிற்றூரில் 10 பிப்ரவரி 1950இல் பிறந்தார். இவருடைய பெற்றோர் சந்திரஹாசன் குச்சிராயர்-கமலாம்பாள் ஆவர். இவர் அஞ்சல் ஊழியராக பணியாற்றியபடி இலக்கிய வெளியில் பங்காற்றியவர்.

இலக்கியப்பணி

தொகு

இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிறுகதைகளும், புதினங்களும் எழுதிவருகிறார். இவர் எழுதிய முதல் சிறுகதை எம். எஸ். மணியன் நடத்திய கற்பூரம் இதழில் வெளியானது. இவரது சிறுகதைகள் தீபம் (இதழ்), தென்றல், கண்ணதாசன் உள்ளிட்ட பல இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பத்து புதினங்களையும் எழுதியுள்ளார். இவரது புதினங்கள் 'இனவரைவியல் புதினங்களின் முன்னோடி' என்று கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் மதிப்பிட்டுள்ளார்.

சிறுகதைத் தொகுப்புகள்

தொகு
  • இவர்களும் ஜட்கா வண்டியும் (அனன்யா பதிப்பகம், 2004) [1]
  • சி.எம்.முத்துவின் சிறுகதைகள் [2]

புதினங்கள்

தொகு
  • நெஞ்சின் நடுவே (1982) [3]
  • கறிச்சோறு (1989)[3]
  • அப்பா என்றொரு மனிதர் (2000)[3]
  • பொறுப்பு (2001) [4]
  • வேரடி மண் (2003)[3][5]
  • ஐந்து பெண்மக்களும் அக்ரஹாரத்து வீடும் (2010)
  • மிராசு [6] (அனன்யா, தஞ்சாவூர்) 28 ஜ‌னவரி 2018இல் தஞ்சாவூரில் நூல் வெளியிடப்பட்டது.[7]

விருதுகள்

தொகு
  • கதா விருது [2]
  • இலக்கியச் சிந்தனை விருது [2]
  • வருகை தரு இலக்கிய ஆளுமை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் [8]

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எம்._முத்து&oldid=3750984" இலிருந்து மீள்விக்கப்பட்டது