சி. எஸ். ஐ துவக்கப் பள்ளி, நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சி. எஸ். ஐ துவக்கப்பள்ளி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் கி.பி. 1879ஆம் ஆண்டு இருபாலர் பள்ளியாகத் துவங்கப்பட்டது. இப்பள்ளி துவங்கப்பட்டு 141 ஆண்டுகள் (2020 இல்) நிறைவடைந்துவிட்டது. இது அரசு உதவிபெறும் பள்ளி ஆகும். இதன் முதல் தலைமைஆசிரியர் ஞானப்பிரகாசம் பிள்ளை ஆவார். இப்பள்ளி மதுரை முகவை திருமண்டலத்திற்கு உட்பட்டது. இப்பள்ளியின் தற்போதைய தாளாளர் அருள்திரு கிங் சாமுவேல் சற்குணம். தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராஜா (2020 முதல்)
வளர்ச்சி
தொகுகி.பி. 1879ஆம் ஆண்டில் கூரைக் கட்டடத்தில் துவங்கப்பட்டது. சிலகாலத்திற்குப்பின் ஓட்டுக்கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. பின்னர் இப்பள்ளிக் கட்டிடம் 2001 மற்றும் 2013ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு, பல வசதிகளுடன் செயல்பட்டுவருகிறது. நூற்றாண்டு கடந்த பள்ளி என்ற பெருமைக்குரியது.
தொகுமுன்னாள் தலைமை ஆசிரியர்கள் விவரம்:
- செல்லையா
- பி. எஸ். எப். பாஸ்கரன்
- ராசையா
- உதயக்குமார்
- பால்ஜெயகரன்
- ஜோஷ்வா
- பாக்கியவதி
- ஞானசெல்வம். (2016 - 2020)