சி. எஸ். ரங்கா ஐயர்

இந்திய சுதந்திர ஆர்வலர்

சி. எஸ். ரங்கா ஐயர் (C. S. Ranga Iyer) (1895-1963) ஓர் இந்திய பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், இந்திய சுதந்திர ஆர்வலரும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். [1]

சொந்த வாழ்க்கை

தொகு

சி.எஸ். ரங்கா ஐயர் 1895 இல் சென்னை மாகாணத்தில் பிறந்தார். சென்னை, மாநிலக் கல்லூரியில் தனது கல்வியைப் பெற்றார். கல்வியை முடித்தவுடன், ஒரு பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். தி இன்டிபென்டன்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், இவர் கேத்ரின் மேயோவின் மதர் இந்தியா என்ற நூலை பகடி செய்து பாதர் இந்தியா என்ற புத்தகத்தை எழுதினார்.

ரங்கா ஐயர் அரசியலிலும் தீவிரமாக இருந்தார் . 1929 இல் வெளியேற்றப்படும் வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினராக பணியாற்றினார்.

ஏகாதிபத்திய சட்டசபை

தொகு

ரங்கா ஐயர் 1923 இல் ஏகாதிபத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1929 இல், இவர் சட்ட சபையில் தீண்டாமை ஒழிப்பு மசோதாவை முன்மொழிந்தார். ஆனால் பின்னர் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு போன்ற காங்கிரசின் முக்கிய உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்தனர் என்று காரணம் கூறி தனது திட்டத்தை திரும்பப் பெற்றார். [2]

ஆதாரங்கள்

தொகு
  • Selected Works of Motilal Nehru, Volume 2.

மேற்கோள்கள்

தொகு
  1. "India in the Crucible – C. S. Ranga Iyer (1928) (1st ed) – GOHD Books" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-16.
  2. Dr. Ambedkar: Life and Mission.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._எஸ்._ரங்கா_ஐயர்&oldid=3878365" இலிருந்து மீள்விக்கப்பட்டது