சி. கே. சதாசிவன்
இந்திய அரசியல்வாதி
சி. கே. சதாசிவன் (C. K. Sadasivan) என்பவர் 13 ஆவது கேரள சட்டமன்றத்தின் ஓர் உறுப்பினர் ஆவார். இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மார்க்சிசுட்டு பிரிவைச் சேர்ந்தவராவார். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள காயம்குளம் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக சதாசிவன் 1991, 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்[1]
வகித்த பதவிகள்தொகு
- கயினாகாரி பஞ்சாயத்து உறுப்பினர்.
- மாவட்ட கர்சாகா தொழிலாளர் ஒன்றியத் தலைவர் மற்றும் அம்பலபுழா தாலுக்கா சேத்து தொழிலாளர் ஒன்றியத் தலைவர்
- அம்பலபுழா தாலுக்கா சுமை தூக்கும் மற்றும் கூலித் தொழிலாளர் ஒன்றியத் தலைவர், தேங்காய் நார் தொழிலாளர் ஒன்றியத் தலைவர்.
- மாநில மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர், சி,பி,ஐ
- நேரு கோப்பை படகுப் போட்டி செயற்குழு உறுப்பினர்
- படகு வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகள் தொழிலாளர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர்
தனிப்பட்ட வாழ்க்கைதொகு
சதாசிவம் 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி குமரன் மற்றும் கார்தியாயினி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். பின் பீனாவை மணந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Members - Kerala Legislature". 13 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 May 2016 அன்று பார்க்கப்பட்டது.