சி. சிவசங்கரன்

சி.சிவசங்கரன் ஒரு தமிழ் வணிகரும் தொழில்முனைவோரும் ஆவார். இவர் சென்னையைத் தலைமை இடமாக கொண்டு இயங்கும் சிவா குழுமத்தின் தலைவர் ஆவர். இவரின் வருமான மதிப்பு 4000 கோடி (4 பில்லியன்) ஆகும். செஷல்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள சிவசங்கரன் திவாலானதாக செஷல்ஸ் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.[1]

சின்னக்கண்ணன் சிவசங்கரன்
பிறப்பு29 சூலை 1956 (1956-07-29) (அகவை 68)
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
இருப்பிடம்பல்நிலை வாழ்விடம் - சீசெல்சு, மொரிசியசு, மலேசியா மற்றும் இந்தியா
தேசியம்சீசெல்சு
படித்த கல்வி நிறுவனங்கள்இளங்கலை பொறியியல் - இயந்திர புலம்; சிறப்பு பட்ட படிப்பு - ஹார்வர்ட் வணிகவியல் பள்ளி
பணிதலைவர், சிவா குழுமம்
வாழ்க்கைத்
துணை
ஜெயலட்சுமி
பிள்ளைகள்சரவணா சிவசங்கரன்
உறவினர்கள்தந்தை: சின்ன கண்ணன்
வலைத்தளம்
www.svl.co.in/Open/ChairmansMsg.aspx

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்

தொகு

முன்பு தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தன்னை மிரட்டி தன்வசம் இருந்த 74 சதவீத ஏர்செல் நிறுவன பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க வைத்ததாக இவர் எழுப்பிய குற்றச்சாட்டால் இந்திய அரசியலில் புயல் கிளம்பியது. தற்போது இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

சிவா குழுமம்

தொகு
  • சிவா தொழிற்சாலைகள் மற்றும் காப்பு நிறுவனம்
  • சிவா வென்சுர்ஸ் நிறுவனம்
  • எஸ் டெல் (S Tel) - இந்திய தொலைதொடர்பு நிறுவனம்
  • வின்வின்ட் (Winwind) - காற்று மின்சார கருவிகள்
  • ருத்ரா தாதுகள் நிறுவனம் (Rudhra Minerals) - தாது, நிலக்கரி
  • சிவா கப்பல் நிறுவனம் (Siva Shipping)- கடல் வணிகம்
  • இ டி ஹச் நிறுவனம் (ETH Limited) - தகவல் தொழில்நுட்பம்
  • பயோ பாம் (Biopalm Energy Limited) - பயோ பாம் என்னை

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. "தொழிலதிபர் சிவசங்கரன் திவால்: செஷல்ஸ் நீதிமன்றம்".தி இந்து தமிழ் (02 செப்டம்பர் 2014)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சிவசங்கரன்&oldid=3980653" இலிருந்து மீள்விக்கப்பட்டது