சி. ஜெயந்தி பத்மநாபன்
இந்திய அரசியல்வாதி
சி. ஜெயந்தி பத்மநாபன் (C. Jayanthi Padmanabhan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் குடியாத்தம் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]
முதல்வர் எடப்பாடி க. பழனிசாமிக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கிளர்ச்சித் தலைவர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்இணைந்ததால் சபாநாயகர் ப. தனபாலால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[3][4]