சி. நயினார் குலசேகரன்
சி. நயினார் குலசேகரன் ( - 30 ஜூலை 2017) தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், நட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளராவார். தாமிரபரணி ஆற்றைக் காக்க பல்வேறு போராட்டங்களைத் முன்னெடுத்தவர்.[2][3]
சி. நயினார் குலசேகரன் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | தாமிரபரணி நதிநீர் பேரவை |
வாழ்க்கைத் துணை | வெள்ளையம்மாள்[1] |
பிள்ளைகள் | மகன் ராஜ்குமார், மகள்கள் செல்லக்கனி, செல்வக்குமாரி[1] |
சிறுவயதிலிருந்தே விவசாயிகளுக்கு ஆதரவாகப் பல போராட்டங்களை நடத்தினார். காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க "தாமிரபரணி நதிநீர் பேரவை" என்ற அமைப்பை நிறுவினார். தாமிரபரணியிலிருந்து தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் எடுக்கத் தடை, மணல் அள்ள எதிர்ப்பு, தாமிரபரணி மாசைக் குறைக்க நடவடிக்கை, ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரக் கோரிக்கை எனப் பல போராட்டங்களை நடத்தியவர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 5 ஆண்டுகள் தாமிரபரணியிலிருந்து மணல் அள்ள தடையாணை பெற்றுத் தந்தவர்களுள் ஒருவராவார். விவசாயப் பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்தி 10 முறை கைதாகி, சிறைக்குச் சென்று வந்தவர். 94 வயதில் உடல் நலக்குறைவால் 2017 ஜூலை 30-ல் காலமானார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "நயினார் குலசேகரன் காலமானார்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 31 ஜூலை 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தூத்துக்குடி குடிநீர் திட்டத்தால் தாமிரபணி விவசாயம் அழியும் அபாயம்...!". ஒன் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 31 ஜூலை 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தாமிரபரணியை காக்க போராடிய நயினார் குலசேகரன் காலமானார்". தி இந்து(தமிழ்). பார்க்கப்பட்ட நாள் 31 ஜூலை 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தாமிரபரணி ஆற்றுப் போராளி நயினார் குலசேகரன் காலமானார்". விகடன். பார்க்கப்பட்ட நாள் 31 ஜூலை 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)