சி. பாலகிருஷ்ணன்

இந்திய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்

டாக்டர் சி.பாலகிருஷ்ணன் (C. Balakrishnan) (1918-1997) திசுமாற்று அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். (மரக்கரா, சென்னை மாகாணம், இன்றைய கேரளா) இவர் இந்தியாவில் நவீன ஒட்டுறுப்பு அறுவை மருத்துவச் சிகிச்சையின் முன்னோடியாக இருந்தார். இவர் 1958 இல் நாக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்தியாவில் இரண்டாவது சுயாதீன ஒட்டுறுப்பு அறுவை மருத்துவச் சிகிச்சைத் துறையை நிறுவினார்.[1] [2]

தொழில்

தொகு

சண்டிகர், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனத்தின் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர். [3] மதராசு மருத்துவக் கல்லூரியிருந்து தங்கப் பதக்கம் வென்ற இவர், 1946இல் இராணுவ மருத்துவமனையில் தற்காலிக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.[4]

இவர் பிரித்தானிய இந்திய இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார். 1947இல் சுதந்திரத்திற்குப் பிறகு, ஒட்டுறுப்பு அறுவை மருத்துவச் சிகிச்சையில் மேலதிக பயிற்சி பெற இங்கிலாந்து சென்றார். அங்கு தாமஸ் பொம்ஃப்ரெட் கில்னர், சர் அரோல்ட் கில்லீஸ் ஆகியோருடன் பணியாற்றினார்.

திசுமாற்று அறுவை சிகிச்சை துறை

தொகு

1950 இல் இங்கிலாந்திலிருந்து திரும்பி, நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். நாட்டின் இரண்டாவது சுயாதீன ஒட்டுறுப்பு அறுவை மருத்துவச் சிகிச்சை துறை 1958இல் நாக்பூர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உருவாக்கப்பட்டது.[5] இந்திய ஒட்டுறுப்பு அறுவை மருத்துவச் நிபுணர்கள் சங்கத்தின் முதல் கோடை மாநாடு நாக்பூரில் 1964இல் நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவச் சிகிச்சை நாக்பூர் துறையின் தலைவர் பதவியை விட்டு வெளியேறிய பிறகு, இவர் 1966இல் சண்டிகரின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனத்தை நிறுவினார்.[6]

சர்ச்சை

தொகு

இவர்,இந்தியாவில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவச் சிகிச்சையின் முதல் சுயாதீன துறையைத் தொடங்கினார் என்று தவறாகக் கூறப்பட்டுள்ளது. நாக்பூரில் இத்துறை தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1956இல் கொல்கத்தாவில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனம், சேத் சுக்லால் கர்னானி நினைவு மருத்துவமனை (முன்பு மாகாண பொது மருத்துவமனை) ஆகியவற்றில் இந்தியாவின் முதல் சுயாதீனமான ஒட்டுறுப்பு அறுவை மருத்துவச் சிகிச்சை துறையை ஆரம்பித்தவர் முராரி மோகன் முகர்ஜி என்பவராக கூறப்படுகிறது.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. "History Of Indian Plastic Surgery". Association of Plastic Surgeons of India. Archived from the original on 2020-11-09. பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
  2. First plastic surgery department in India, was at Armed Forces Medical College, Pune by Dr. R.N.Sinha.
  3. http://pgimer.edu.in/PGIMER_PORTAL/PGIMERPORTAL/home.jsp
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-29. பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
  5. "Plastic Surgery". Government Medical College, Nagpur. Archived from the original on 2020-02-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
  6. "Department of Surgery: Department Introduction". PGIMER. Archived from the original on 2013-02-03.
  7. Chatterjee, SS (January–June 2010). "Prof. M. M. Mukherjee, Profile". Indian Journal of Plastic Surgery 43 (1): 6–7. doi:10.4103/0970-0358.63939. பப்மெட்:20924441. 
  8. Prof. M.M. Mukherjee, Biography. Association of Plastic Surgeons of India
  • Classification of cleft lip and palate by Prof. C. Balakrishnan; now known as Nagpur Classification.
  • Balakrishnan C. (1975) Indian Classification of Cleft Lip and Palate. Ind. J. Plast. Surg. Vol 8, No. 1, p23-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பாலகிருஷ்ணன்&oldid=3727659" இலிருந்து மீள்விக்கப்பட்டது