முராரி மோகன் முகர்ஜி

இந்திய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்

பேராசிரியர் முராரி மோகன் முகர்ஜி (Murari Mohan Mukherjee) (30 திசம்பர் 1914 - 26 ஜூலை 1988) இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல இந்திய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணராவார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

இவர், பிரபலபாகல்பூரிலுள்ள தனது தாய் மாமா வீட்டில் பிறந்தார். இருப்பினும் இவரது குடும்பம் மேற்கு வங்கத்தின் ஹூக்லி மாவட்டத்திலுள்ள கூக்ளி-சூச்சுராவை பூர்வீகமாகக் கொண்டிருந்தது. 1931இல் கூக்ளி-சூச்சுராவில் உள்ள சிவ சந்திர சோம் பயிற்சி கழகத்தில் மெட்ரிகுலேசனில் தேர்ச்சி பெற்ற பிறகு கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து 1949இல் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். மேலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொது அறுவை சிகிச்சை நிபுணர் பட்டத்தையும் முடித்தார்.[1][2] இவர் சர் அரோல்ட் கில்லீஸ், தாமஸ் பொம்ஃப்ரெட் கில்னரின் கீழ் இங்கிலாந்தில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையில் மேலதிக பயிற்சி பெற்றார். இங்கிலாந்தின் அரச கழக அறுவை சிகிச்சை நிபுணர்களின் கல்லூரி, எடின்பர்க்கின் அரச கழக அறுவை சிகிச்சை நிபுணர் கல்லூரி ஆகியவற்றிலிருந்து தனது கூட்டுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். மேலும், நவம்பர், 1951 இல் மருத்துவராக பணிபுரிய கொல்கத்தா திரும்பினார்.

தொழில்

தொகு

1956 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனம், சேத் சுக்லால் கர்னானி நினைவு மருத்துவமனை (முன்பு மாகாண பொது மருத்துவமனை) ஆகியவற்றில் இந்தியாவின் முதல் சுயாதீனமான ஒட்டுறுப்பு அறுவை மருத்துவச் சிகிச்சை துறையை இவர் தொடங்கினார்.[1][2]

இந்தியாவில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையின் சமகாலத் துறைகள்

தொகு

1945 ஆம் ஆண்டில், இரண்டு இந்திய முக அறுவை சிகிச்சை பிரிவுகள் நிறுவப்பட்டன. மருத்துவர் ஜி.எம். பிட்ஸ்ஜிப்பன் என்பவரின் தலைமையின் கீழ் புனே மாவட்டத்திலுள்ள கிர்கி/காட்கி என்ற இடத்தில் முதல் அலகும், பின்னர், சிக்கந்தராபாத்தில்மருத்துவர் எரிக் பீட் தலைமையின் கீழ் இரண்டாம் அலகும் தொடங்கப்பட்டது. இராணுவ மருத்துவராக இருந்த சி.பாலகிருஷ்ணன் 1950இல் இங்கிலாந்திலிருந்து திரும்பி நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார் . பின்னர், 1958 ஆம் ஆண்டில் நாக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாட்டின் இரண்டாவது சுயாதீன ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறையைத் தொடங்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Chatterjee, SS (January–June 2010). "Prof. M. M. Mukherjee, Profile". Indian Journal of Plastic Surgery 43 (1): 6–7. doi:10.4103/0970-0358.63939. பப்மெட்:20924441. 
  2. 2.0 2.1 Prof. M.M. Mukherjee, Biography. Association of Plastic Surgeons of India
  3. "Plastic Surgery". Government Medical College, Nagpur. Archived from the original on 2020-02-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முராரி_மோகன்_முகர்ஜி&oldid=3568164" இலிருந்து மீள்விக்கப்பட்டது