சி. மகேந்திரன்

சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மக்களவை உறுப்பினர்

சி. மகேந்திரன் (C. Mahendran)(பிறப்பு: மே 4, 1972) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போது மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அஇஅதிமுக சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் பொள்ளாச்சி தொகுதியில் இருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 2014 தேர்தலில் இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சி. மகேந்திரன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
மே, 2021
தொகுதிமடத்துக்குளம்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2019
தொகுதிபொள்ளாச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 மே 1972 (1972-05-04) (அகவை 52)
மூங்கில்தொழுவு, திருப்பூர், தமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்அருள்செல்வி
பிள்ளைகள்1
வாழிடம்(s)மூங்கில்தொழுவு, திருப்பூர், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்வாதி, விவசாயி

இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூங்கில்தொழுவு பஞ்சாயத்துக்கான பஞ்சாயத்துத் தலைவராகவும் இருந்துள்ளார்.[3]

இவர் கோயம்புத்தூர், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் வேளாண் தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "C Mahendran(AIADMK):Constituency- MADATHUKULAM(TIRUPPUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-12-02.
  2. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  3. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மகேந்திரன்&oldid=3943594" இலிருந்து மீள்விக்கப்பட்டது