சி. வேலுசுவாமி
சி. வேலுசுவாமி (பி: 1927, இறப்பு: மே 24 2008) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். சந்திரன், கவிதைப்பித்தன், குமரன், சரவணபவன் எனும் புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் அச்சு வசதியும் ஊடக வளர்ச்சியும் மிக அரிதாக இருந்த தொடக்க காலத்திலேயே உண்மையான தமிழ் மொழி பண்பாட்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடியுமாவார். மேலும் இவர் ஒரு ஆசிரியருமாவார். மேலும் இவர் 1962ல் துணைத் தலைமை ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். இவர் தமது இலக்கிய, சமயப் பணிகளுக்காகப் பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்றுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1948 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், நடிப்பு பயிற்சிகள், பாடல்கள் ஆகியவற்றை எழுதியும் நடித்தும் பாடியுமுள்ளார். மேலும் மொழிபெயர்ப்புகளையும் திருக்குறள் பாக்களை மலாய் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிட்டுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல்கள்
- 'செந்தமிழ் வாசகம்'
- 'நற்றமிழ் துணைவன்'
- 1967இல் மலேசியத்தமிழ் எழுத்தாளர்கள் விவர நூல் (225 மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரப்பட்டியல் அடங்கிய இது மலேசியாவில் வெளி வந்த முதல் தமிழ் எழுத்தாளர் தொகுப்பு நூல்).
- இந்து மத விளக்க நூல்கள்,
- தமிழ் மொழி கற்பிக்கும் நூல்கள் -
- தமிழ்-மலாய்-ஆங்கிலம்'அகராதி
- 'மலாய்-தமிழ்', 'தமிழ்-மலாய்' தமிழ் அகராதிகள்
- 'முப்பது நாட்களில் மலாய்'
- 'கவிதைப்பித்தன் கவிதைகள்'
- 'தேனீயைப்பார்'
- 'பாட்டுப்பாடலாம்'
- 'அருள்புரிவாய்'
- சிறுகதைத் திறனாய்வுச் சிந்தனைகள்(1999)
- புதையல்,
- மறவேன் உன்னை'
பரிசில்களும், விருதுகளும்
தொகு- 'தொண்டர்மாமணி' - மலேசிய இந்து சங்கத்தின்
- 'சங்கபூஷன்' விருது
- தமிழ் எழுத்தாளர் சங்க விருது (1988)
- மலேசிய அரசாங்கத்தின் பி.பி.என். விருது
உசாத்துணை
தொகு- தமிழ் எழுத்துலகம் தளத்தில் சி. வேலுசுவாமி பக்கம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்