தத்துவப்பிரகாசர் (சீகாழி)

(சீகாழித் தத்துவப்பிரகாசர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீகாழித் தத்துவப்பிரகாசர் [1] 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ குருமார்களில் ஒருவர். தத்துவப்பிரகாசர் என்னும் பெயர்கொண்ட பலருள் இவர் காலத்தால் முந்தியவர்.

சீகாழியில் சிற்றம்பல நாடிகள் சைவத் தொண்டு செய்துவந்தார். இந்தத் தத்துவப்பிரகாசர் இவரிடம் ஞானம் பெற்றார்.[2] தத்துவப்பிரகாசர் காலம் 1325-1350 என்பதால் இவர் காலம் 1350-1375 எனக் கொள்ளப்படுகிறது. தத்துவப்பிரகாசம் என்னும் சித்தாந்தப் பெருநூலை இயற்றியவர்.[3]

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 156. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. தன்னை அறிவிக்கும் தற்போதம் மாற்றுவிக்கும்
    அன்ன அருள் ஆனந்தம் ஆற்றுவிக்கும் - மன்னிய சீர்த்
    தத்துவப்ரகாசன் இயல் சண்பையார் கோன் உரைத்த
    தத்துவப்ரகாச நூல் தான் (தத்துவப்பிரகாசம் நூலின் சிறப்புப் பாயிரம்)
  3. திருத்தாலாட்டு என்றும், தத்துவப் பிரகாசம் என்றும் பெயர் கொண்ட நூல் வேறு. இதனை இயற்றியவர் தத்துவராயர்.