சீக்கியத்தில் உணவு

சீக்கியத்தில் உணவு என்பது, சீக்கிய மதத்தில் உணவு குறித்த கொள்கைகளையும் நடைமுறைகளையும் உள்ளடக்குகிறது. சீக்கியக் கோயிலான குருத்துவாராவில் பால் மற்றும் மரக்கறி உணவுகளே வழங்கப்படுகின்றன. ஆனாலும் சீக்கியர்கள் மாமிசத்தை விலக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.[1] [2] சீக்கியர்களுக்குத் தாம் புலால் உண்ணுவதா இல்லையா என முடிவு செய்வதற்கான சுதந்திரம் உண்டு என்பதே பொதுவான கருத்து.[3][2] சீக்கியர் ஒருவர் உரிய சடங்கு மூலம் "அம்ரித்தாரி" ஆனபின்னர், "குதா" எனப்படும் சடங்கு முறைப்படி கொல்லப்பட்ட விலங்கொன்றின் இறைச்சியை உண்பது கூடாது என்பதே.[4] ஏனெனில், இது சீக்கியத்தில் தடுக்கப்பட்டுள்ள நான்கு விடயங்களுள் ஒன்று.[5][6] இரும்புப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்துவது என்பதும் சீக்கியர்கள் கைக்கொள்ளவேண்டிய நடைமுறைகளுள் ஒன்று.

"அகல் தக்த்" தீர்ப்புதொகு

சீக்கியர்களின் உலகியல் விவகாரங்களுக்கான நடுவ அமைப்பான "அகல் தக்த்" சீக்கிய சமூகம் தொடர்பான சர்ச்சைக்குரிய விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டது. இந்த அமைப்பு 1980 பெப்ரவரி 15 தேதியிட்டு வெளியிட்ட விளக்கம் சீக்கியர்கள் புலால் உண்பது சீக்கிய நெறி முறைகளுக்கு எதிரானது அல்ல என்றும் "அம்ரித்தாரி" சீக்கியர்கள் சடங்கு முறையில் பெறப்படாத இறைச்சியைச் சாப்பிடலாம் என்றும் கூறுகிறது.[7]

மேற்கோள்கள்தொகு

  1. "Only Meat Killed by Ritual (Kutha) Is Banned for a Sikh". Sgpc. 2013-08-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Mosher, Lucinda (1 June 2005). "4 Distance". Belonging (Faith in the Neighbourhood) [Paperback]. Church Publishing Inc. பக். 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59627-010-1. http://books.google.co.uk/books?id=HrFYN3IEJ6wC&pg=PR10&dq=Belonging+(Faith+in+the+Neighbourhood)&hl=en#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 24 November 2010. 
  3. "Eating the meat of an animal slaughtered the Muslim way (Kutha)". Sgpc. 2002-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-09 அன்று பார்க்கப்பட்டது.
  4. Sekhon, Devinder Singh; Singh; Devinder (2005-01-01). "10 Gurmat and Meat". Philosophy of Guru Granth Sahib. Anmol Publications PVT. LTD.. பக். 143 to 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-261-2357-5. http://books.google.com/books?id=LHNrD5PE6OgC. பார்த்த நாள்: 26 November 2010. 
  5. Punjabi-English Dictionary, Punjabi University, Dept. of Punjabi Lexicography, ISBN 81-7380-095-2; Hardcover; 2002-10-01
  6. Kaur, Upinder Jit (1990). Sikh Religion And Economic Development. National Book Organisation. பக். 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185135489. 
  7. Singh, Dharam (2001). Perspectives on Sikhism: Papers Presented at the International Seminar on Sikhism: a Religion for the Third Millennium Held at Punjabi University, Patiala on 27-29 March 2000. Publication Bureau, Punjabi Universit. பக். 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173807367. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்கியத்தில்_உணவு&oldid=3586974" இருந்து மீள்விக்கப்பட்டது