சீசியம் பெராக்சைடு
சீசியம் பெராக்சைடு (Caesium peroxide) என்பது Cs2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீசியமும் ஆக்சிசனும் சேர்ந்து மஞ்சள் நிறத்தில் சீசியம் பெராக்சைடு உருவாகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
12053-70-2 | |
பண்புகள் | |
Cs2O2 | |
தோற்றம் | மஞ்சள்[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம்[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் பெராக்சைடு சோடியம் பெராக்சைடு பொட்டாசியம் பெராக்சைடு உரூபிடியம் பெராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசீசியம் உலோகத்தை நேரடியாக ஆக்சிசனேற்றம் செய்து சீசியம் பெராக்சைடை தயாரிக்க முடியும். சீசியம் உலோகத்துடன் விகிதவியல் அளவில் அமோனியாவைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் சீசியம் பெராக்சைடை தயாரிக்கலாம்.[1]
- 2Cs + O2 → Cs2O2
சீசியம் மீயாக்சைடை சிதைவு வினைக்கு உட்படுத்தியும் சீசியம் பெராக்சைடத் தயாரிக்க முடியும்:[3]
- 2CsO2 → Cs2O2 + O2
வேதி வினை
தொகுசிசியம் பெராக்சைடை சூடுபடுத்தினால் சீசியம் மோனாக்சைடாக சிதைவடையும்.
- 2Cs2O2 → 2 Cs2O + O2
பெராக்சைட்டு அயனி இருப்பதன் காரணமாக 743 cm−1 அளவில் சீசியம் பெராக்சைட்டு ராமன் நிறமாலையியல் அதிர்வை வெளிப்படுத்துகிறது..[4]
பயன்
தொகுகுறைவான செயல்திறனைக் கொண்டிருப்பதால் சீசியம் பெராக்சைடு ஒளிநேர்மின்வாய்களில் மேற்பூச்சாகப் பூச பயன்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 I. I. Volnov (2012). Peroxides, Superoxides, and Ozonides of Alkali and Alkaline Earth Metals. Springer. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781468482522.
- ↑ Band, A.; Albu-Yaron, A.; Livneh, T.; Cohen, H.; Feldman, Y.; Shimon, L.; Popovitz-Biro, R.; Lyahovitskaya, V. et al. (2004-07-27). "Characterization of Oxides of Cesium". The Journal of Physical Chemistry B (American Chemical Society (ACS)) 108 (33): 12360–12367. doi:10.1021/jp036432o. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-6106.
- ↑ Berardinelli, S. P.; Kraus, D. L. (1974-01-01). "Thermal decomposition of the higher oxides of cesium in the temperature range 320-500.deg.". Inorganic Chemistry (American Chemical Society (ACS)) 13 (1): 189–191. doi:10.1021/ic50131a037. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669.
- ↑ Livneh, Tsachi; Band, Alisa; Tenne, Reshef (2002). "Raman scattering from the peroxide ion in Cs2O2". Journal of Raman Spectroscopy (Wiley) 33 (8): 675–676. doi:10.1002/jrs.900. பன்னாட்டுத் தர தொடர் எண்:0377-0486. Bibcode: 2002JRSp...33..675L. https://archive.org/details/sim_journal-of-raman-spectroscopy_2002-08_33_8/page/675.
- ↑ Sun, Yun; Liu, Zhi; Pianetta, Piero; Lee, Dong-Ick (2007). "Formation of cesium peroxide and cesium superoxide on InP photocathodes activated by cesium and oxygen". Journal of Applied Physics (AIP Publishing) 102 (7): 074908–074908–6. doi:10.1063/1.2786882. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8979. Bibcode: 2007JAP...102g4908S.