சீசெல்சின் சுதந்திர நினைவுச் சின்னம்
சீசெல்சில் உள்ள நினைவுச் சின்னம்
சுதந்திர நினைவுச் சின்னம் (Liberty Monument) சீசெல்சு நாட்டின் தலைநகரம் விக்டோரியாவில் அமைந்துள்ளது. பிரித்தானியர்களிடமிருந்து சீசெல்சு சுதந்திரம் பெற்றதை கொண்டாடும் வகையில் இச்சின்னம் அமைக்கப்பட்டது.
இடம் | 5 ஆவது சூன் அவென்யூ, விக்டோரியா, சீசெல்சு |
---|---|
வடிவமைப்பாளர் | தோம் போவர்சு |
வகை | சிற்பம் |
கட்டுமானப் பொருள் | வெண்கலம் |
துவங்கிய நாள் | 2014 |
முடிவுற்ற நாள் | 2014 |
அர்ப்பணிப்பு | சீசெல்சின் சுதந்திரம் |
வரலாறு
தொகு1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுதந்திர மனிதன் சிலைக்கு மாற்றாக சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது 201 ஆம் ஆண்டு சூன் மாதம் 29 ஆம் தேதியன்று இயேம்சு மைக்கேல் என்பவரால் இச்சின்னம் திறந்து வைக்கப்பட்டது.[1]
வடிவமைப்பு
தொகுசுதந்திர நினைவுச்சின்னம் தோம் போவர்சால் வடிவமைக்கப்பட்டு செதுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் உள்ள வெண்கல காலத்து வார்ப்புக் கூடத்தில் இவ்வெண்கலம் வடிவமைக்கப்பட்டது.[2][3] ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் தலைக்கு மேல் தேசியக் கொடியை வைத்திருப்பதை இச்சின்னம் சித்தரிக்கிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Thande, George (4 April 2014). "Mixed reactions to plans for moving Liberation monument". Seychelles News Agency. http://m.seychellesnewsagency.com//articles/149/Mixed+reactions+to+plans+for+moving+Liberation+monument.
- ↑ "President Michel inaugurates Liberty monument for Seychelles Independence Day". State House. 29 June 2014. http://www.statehouse.gov.sc/news.php?news_id=2523.
- ↑ "The Liberty Monument". Seychelles Nation. 12 July 2014. http://www.nation.sc/article.html?id=242297.
- ↑ "New Liberty monument marks celebrations of 38 years of Seychelles Independence". Seychelles News Agency. 29 June 2014. http://seychellesnewsagency.com//articles/868/New+Liberty+monument+marks+celebrations+of++years+of+Seychelles+Independence.