சீதளநாதர் கோயில்

சீதளநாதர் கோயில் (Sheetal Nath Mandir) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் தலைநகரான சிறிநகரில் அமைந்துள்ளது. இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். 1990-இல் காஷ்மீரில் வாழ்ந்து கொண்டிருந்த காஷ்மீர பண்டிதர்களில் 219 பேரை தீவிரவாதிகள் இனப்படுகொலை செய்தனர். இதனால் இக்கோயில் கடந்த 1990 ஆண்டிலிருந்து 31 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. இக்கோயிலை வசந்த பஞ்சமி திருநாளான, 16 பிப்ரவரி 2021 அன்று பக்தர்களின் வழிபாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது. இக்கோயிலை சனாதன தர்ம சீதள நாதர் ஆஸ்சிரம சபையினர் நிர்வகிக்கின்றனர். இக்கோயிலை மீண்டும் திறந்து இந்துக்கள் வழிபட உள்ளூர் இசுலாமிய காஷ்மீர் மக்கள் உதவினர்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Shital Nath Temple closed due to militancy reopens after 31 years on Basant Panchami
  2. Temple in Srinagar closed due to militancy reopens after 31 years on Panchami

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதளநாதர்_கோயில்&oldid=3707145" இலிருந்து மீள்விக்கப்பட்டது