சீதாமௌ இராச்சியம்

சீதாமௌ இராச்சியம் (Sitamau State) பிரித்தானிய இந்தியாவின் கீழ் இருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் சீதாமௌ நகரம் ஆகும். இது தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டசௌர் மாவட்டத்தில் இருந்தது. சீதாமௌ இராச்சியத்தை 1701-ஆம் ஆண்டில் நிறுவியவர் இராஜா கேசவதாஸ் ஆவார். 350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த சீதாமௌ இராச்சியத்தின் சராசரி ஆண்டு வருவாய் ரூபாய் 1,30,000 ஆகும்.[1] முகலாயர்]]களுக்கு ஜிஸ்யா வரியை செலுத்தாத காரணத்தால் ரத்லம் இராச்சியத்தை முகலாயப் பேரரசில் இணைத்தனர். 1705-இல் கேசவதாஸ் ரத்லம் இராச்சியத்தை சீதாமௌ இராச்சியத்துடன் இணைத்து கொண்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் அரசியல் இணைப்பு ஒப்பந்தப்படி சீதாமௌ இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

சீதாமௌ இராச்சியம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1701–1948
கொடி சின்னம்
கொடி சின்னம்
தலைநகரம் சீதாமௌ
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1701
 •  இந்தியாவுடன் இணைத்தல் 1948
பரப்பு
 •  1901 906 km2 (350 sq mi)
Population
 •  1901 23,863 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)

ஆட்சியாளர்கள் தொகு

சீதாமௌ இராச்சியத்தின் ஆட்சியாளர்கள் இராஜபுத்திரர்களான ரத்தன் சிங் ரத்தோரின் வழித்தோன்றல்கள் ஆவார்.[2]

மன்னர்கள் தொகு

  •   1701 – 1748 கேசவ தாஸ்
  •   1748 – 1752 கஜ் சிங்
  •   1752 – 1802 பதே சிங்
  •   1802 – 1867 முதலாம் ராஜராம் சிங் (இறப்பு: 1867)
  •   1867 – 28 மே 1885 பவானி சிங் (பிறப்பு. 1836 – இறப்பு 1885)
  • 8 டிசம்பர் 1885 – 1899 பகதூர் சிங்
  •   1899 – 9 மே 1900 சார்துல் சிங்
  • 11 மே 1900 – 15 ஆகஸ்டு 1947 இரண்டாம் இராஜாராம் சிங் (பிறப்பு:. 1880 – இறப்பு. 1967) (11 டிசம்பர் 1911 முதல் இரண்டாம் இராஜராம் சிங்)[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Imperial Gazetteer of India, v. 23, p. 51.
  2. Imperial Gazetteer of India, v. 23, p. 51.
  3. "Indian Princely States K-Z". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 15 August 2019.



"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாமௌ_இராச்சியம்&oldid=3361851" இலிருந்து மீள்விக்கப்பட்டது