சீதா சாஹு
சீதா சாஹு (Sita Sahu) என்பவர் சிறப்பு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற இந்தியர் ஆவார். 2011 ஆம் ஆண்டு ஏதென்சில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக்கின் போது 200 மற்றும் 4X400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயங்களில் வெண்கலப் பதக்கங்களை வென்றார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், வெறும் பதினைந்து வயதிலேயே இப்பதக்கங்களை வென்றார்.[1] பொருளாதார ரீதியில் சிரமப்பட்ட, சீதா தனது குடும்பத்தின் சாலை உணவு வியாபாரத்தில் சேர்ந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.[2] ஊடகங்களில் இவரை அரசுகள் கண்டுகொள்ளவில்லை செய்திகள் வெளியான நிலையில், பதக்கம்பெற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் சாஹுவுக்கு வெகுமதி அளிக்கப்பட்டது. தேசிய அனல் மின் கழகம் இவரது குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் மற்றும் இவரது 3 வெண்கலப் பதக்கங்களுக்கு மாநில அரசு ரூ.3 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்தியது.
பதக்கங்கள்
தொகு•2011 ஏதென்ஸ் சிறப்பு ஒலிம்பிக்ஸ் 200மீ -வெண்கல பதக்கம். •2011 ஏதென்ஸ் சிறப்பு ஒலிம்பிக்ஸ் 4X400மீ தொடர் ஓட்டப்பந்தயம்-வெண்கல பதக்கம்.
குறிப்புகள்
தொகு- ↑ Help us make a difference! பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம். Special Olympics. Retrieved on 12 July 2015.
- ↑ "Olympics medal winner now a 'gol gappa' seller". Time of India. Apr 10, 2013. பார்க்கப்பட்ட நாள் Apr 15, 2017.