சீனத்தோட்டம், சிங்கப்பூர்

சீனத்தோட்டம் (சீனம்: 裕华园), சிங்கப்பூரின் கிழக்கு ஜூரோங் பகுதியில் அமைந்துள்ளது. இதை ஜூரோங் தோட்டம் என்றும் அழைப்பர். இத்தோட்டம், 1975 - ல் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர் தைவானைச் சேர்ந்த பேராசிரியர் யூன்-சென் யு. இது சீன பாரம்பரியத் தோட்டக்கலையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டுள்ளது. சீனத் தோட்டம் தொடருந்து நிலையம் இதன் அருகில் அமைந்துள்ளது. ஜேடிசி கூட்டுறவினால் இது முகைமைப்படுத்தப் படுகின்றது.[1]

Chinese Garden
裕华园
Chinese Garden
Map
வகைTourist attraction
அமைவிடம்Yuan Ching Road, Jurong East, சிங்கப்பூர்
பரப்பளவு135,000 square meters
திறப்பு1975
இயக்குபவர்JTC Corporation[1]
திறந்துள்ள நேரம்Opened daily from 6am to 11pm (SST)

கற்சிங்கம்

தொகு

சீனத்தோட்டத்தின் நுழைவாயிலில் கற்சிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீனர்களின் பாரம்பரிய நம்பிக்கையின்படி சிங்கங்கள் இதன் வாயிலைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இக்கற்சிங்கங்கள் தைவானிலிருந்து தருவிக்கப்பட்டவை. இத்தோட்டமானது சிறு பாலம் மூலம் ஜப்பானிய தோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Toh, Yong Chuan (5 May 2014). "Makeover for Jurong gardens". The Straits Times (Singapore) இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140819084244/http://mypaper.sg/top-stories/makeover-jurong-gardens-20140505. பார்த்த நாள்: 17 August 2014. 

வெளி இணைப்புக்கள்

தொகு