சீனப் புரட்சி (1949)
சீனப் புரட்சி 1949 என்பது சீன உள்நாட்டுப் போரில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் புரட்சியையும் வெற்றியையும் குறிக்கிறது. சீன பொதுவுடமைக் கட்சியின் அதிகாரபூர்வ வரலாற்றில் இது விடுதலைப் போர் எனப்படுகிறது.
சீனப் பொதுவுடமைக் கட்சிக்கும், குவோமின்டாங் அல்லது சீனத் தேசியவாதக் கட்சிக்கும் இரண்டாவது சீன-சப்பானிய போரிக்குப் பின்னர் மூண்டும் முரண்பாடு நிகழ்ந்தது. இதில் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பொதுவுடமைக் கட்சி சிறிய அளவு உதவி பெற்றது. ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து சீனத் தேசியவாதக் கட்சி உதவி பெற்றது. மாவோவின் திறமையான மக்கள் ஒன்று திரட்டலிலும், ஒழுங்கமைப்பில், படை நகர்த்தலாலும் ஆள் தொகையில், ஆயுதப் பலத்தில் பலம் குறைந்த சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி பெற்றது.