சீனா–பாக்கித்தான் பொருளாதார பாதை
சீன–பாக்கித்தான் பொருளாதார பாதை (சீன: 中国-巴基斯坦经济走廊; உருது: پاكستان-چین اقتصادی راہداری) சிபிஇசி எனவும் வடக்கு-தெற்கு பொருளாதார பாதை எனவும் அழைக்கப்படுகிறது. இது பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய பொருளாதார பாலம் மொத்த கட்டுமான செலவு $54 பில்லியன் ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஇசி சீனாவின் காசர் (காசி) நகரையும் பாக்கித்தானின் குவாடர் நகரையும் சாலை, குழாய்கள், இருப்புப் பாதை வழியே இணைக்கும் திட்டமாகும்.[1][2]
இப்பொருளாதார பாதை/பாலம் பாக்கித்தானின் உள் கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதுடன் பாக்கித்தானுக்கும் சீனாவுக்குமான பொருளாதார உறவை பலப்படுத்தும் என நம்பப்படுகிறது.[3] . புதிய பட்டுப் பாதையின் ஒரு பிரிவாக இதை சீனா கட்டமைக்கிறது,[4] சீனா இத்திட்டத்துக்கு அளிக்கும் சிறப்பை அதன் 13வது ஐந்தாண்டு திட்டத்தில் சிபிஇசிக்கு பணம் ஒதுக்கியதிலிருந்து அறியலாம்.[5][6]
பாக்கித்தானிய அதிகாரிகள் 2015-2030 காலப்பகுதியில் இத்திட்டத்தால் சுமார் 700,000 நேரடி வேலை வாய்ப்புக்கள் உருவாகுமெனவும் 2-2.5% ஆண்டு பொருளாதார வளர்ச்சி இருக்குமென நம்புகிறார்கள்.[7]. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் இதன் மதிப்பு 1970ஆம் ஆண்டிலிருந்து முதலீடு செய்யப்பட்ட மொத்த வெளிநாட்டு முதலீடுகளுக்கு இணையாக இருக்கும்.[8], மேலும் 2015ஆம் ஆண்டின் பாக்கித்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17% ஆக இருக்கும்.[9]
சிபிஇசி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் உள்கட்டுமான திட்டங்கள் பாக்கித்தானின் முழு நீளத்திற்கும் செயல்படுத்தப்படும். இது தென்மேற்கு பாக்கித்தானின் பலுசிசுத்தான் மாகாணத்திலுள்ள குவடார் நகரை சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான சின்சியாங்கை பல நெடுஞ்சாலைகள் இருப்புப் பாதைகள் வழியே இணைக்கிறது.[10] திட்டமிடப்பட்டு உள்ள உள் கட்டுமான திட்டங்களுக்கு $11 மில்லியன் செலவாகுமென மதிப்படப்பட்டுள்ளது[11]. இப்பணம் குறைந்த வட்டிக்கு நீண்டகால கடனாக பாக்கித்தான் அரசுக்கு சீனா அளிக்கும். இக்கடன் சீனாவின் எக்சம் வங்கி, சீன வளர்ச்சி வங்கி, சீனாவின் தொழில் பொருளாதார வங்கி மூலம் அளிக்கப்படும் [12]. சிபிஇசி திட்டத்தின் ஒரு பகுதியாக கராச்சிக்கும் லாகூருக்கும் இடையே 1,100 கிமீ நீளமுள்ள அகலமான நெடுஞ்சாலை அமைக்கப்படும்,[13] இராவல்பிண்டியிலிருந்து சீன எல்லை வரை அமைக்கப்படும் காரகோரம் நெடுஞ்சாலை புதுக்கப்படும் அல்லது மீண்டும் கட்டப்படும்.. கராச்சி - பெசாவார் இருப்புப்பாதை 2019 டிசம்பருக்குள் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் தொடருந்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.[14][15] பாக்கித்தானின் இருப்புப் பாதை அமைப்பை காசரிலுள்ள சீனாவின் தென் சின்சியாங்கு இருப்புப் பாதை அமைப்புடன் இணைப்பது தான் இறுதி திட்டம்.[16] குழாய்கள் வழியே எண்ணெய் மட்டுமல்லாமல் எரிவளியையும் கொண்டு செல்வது தான் முடிவான திட்டம்[17][17].
$33 மில்லியனுக்கு மேல் மின்சார உள் கட்டமைப்புகளுக்காக செலவிடப்படவுள்ளது, பாக்கித்தானின் கடும் மின் பற்றாக்குறையை கணக்கில் கொண்டு இதை தனியார் குழுமம் மேற்கொள்ளவுள்ளது [18], பாக்கித்தானின் தேவை 4,500 மெகா வாட்டுக்கும் அதிகமாக்கும்[18][19], இது நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 2-2.5% ஆகும். 2018-2020 காலகட்டத்தில் 10,400 மெவா இக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி சிபிஇசி திட்டத்தில் இருந்தாலும் நிலக்கரியிலிருந்தே இந்த மின்சாரத்தின் பெரும் பகுதி உற்பத்தி செய்யப்படும்.[20] 1000 மெவா திறனுடைய சூரிய ஒளி மின்திட்டம் இப்பொருளாதார திட்டத்தில் பாக்கித்தானில் செயல்படுத்தப்படும்.[21]
இப்பாதையின் முதல் வணிகம் 13 நவம்பர் 2016 இல் நடைபெற்றது. சீனாவிலிருந்து சுமையுந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு குவாடர் துறைமுகத்தை அடைந்து அப்பொருட்கள் மேற்கு ஆசிய மேற்கு ஆப்பிரிக்க சந்தைகளுக்கு சென்றன.[22]. கராச்சி - பெசாவார் இருப்புப் பாதையை சீர் செய்ய ஒதுக்கிய $4.5 மில்லியனுக்கு மேல் $8.5 மில்லியனை நவம்பர் 2016இல் சீனா ஒதுக்கியது. $4 மில்லியன் திரவ எரி வளி முனையம் அமைப்பதற்கும் மின்சார பற்றாக்குறையை நீக்குவதற்காக மின்கடத்தி வடம் அமைக்கவும் ஒதுக்கியது. இதன் மூலம் இத்திட்டத்தில் சீனாவின் முதலீடு $55 மில்லியனாக அதிகரித்துள்ளது.[23]
இப்பாதையால் சீனாவுக்கு புதிய பாதை வணிகம் செய்ய கிடைக்கும். தற்போதைய பாதையான தென் சீனக் கடல் பாதையை விட இது தூரம் குறைந்தது. கிட்டத்தட்ட 9,000கிமீ தூரம் குறைவு. மேலும் பாக்கித்தான் சீனாவின் நட்பு நாடு என்பதால் சிக்கல் இல்லை. தென் சீனக் கடலில் தென் கிழக்காசிய நாடுகளுடன் சீனாவுக்கு பிணக்கு உள்ளது. பாக்கித்தானுக்கும் சிபிஇசியால் நன்மையுண்டு, இதன் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தட்டுள்ளன, லாகூர் - கராச்சி இருப்பாதை ஏற்றுமதியை ஊக்குவிக்கும். பாக்கித்தானியர்கள் பயண நேரம் குறைவதால் உலக சந்தையில் விலையில் போட்டியிட முடியும். இதனால் பாக்கித்தானின் சாலை, வானூர்தி, இருப்புப் பாதை, துறைமுக சேவைகள் மேம்படும். மின்பற்றாக்குறை தீர்ந்து தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.[24][25]
பாக்கித்தானிய சீன கடற்படைகள் இப்பொருளாதார பாதையை காக்கும். பாக்கித்தான் தன் கடல் படையின் பணியை விரிவுபடுத்த பணித்துள்ளது.[26] டிசம்பர் 2016 அன்று பாக்கித்தான் கடற்படை கடல் வணிகத்தை பாதுகாக்கும் பொருட்டு டிஎப்-88 என்ற சிறப்பு படையை உருவாக்கியுள்ளது [27][28]. நாடாளுமன்ற ஆணையத்தின் அவைத்தலைவர் 2,000 காவலர்கள் சிந்துவிலும் 5,000 காவலர்கள் பஞ்சாப்பிலும் 12,000 இராணுவத்தினருடன் இணைந்து இப்பொருளாதார பாதையை பாதுகாப்பார்கள் என்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Behind China’s Gambit in Pakistan". Council on Foreign Relations இம் மூலத்தில் இருந்து 2016-11-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161113180529/http://www.cfr.org/pakistan/behind-chinas-gambit-pakistan/p37855.
- ↑ Aneja, Atul (18 April 2015). "Xi comes calling to Pakistan, bearing gifts worth $46 billion". The Hindu. http://www.thehindu.com/news/international/xi-jinping-visit-to-pakistan-preview/article7114980.ece. பார்த்த நாள்: 23 April 2015.
- ↑ "Economic corridor: Chinese official sets record straight". The Express Tribune. 2 March 2015.
- ↑ Hussain, Tom (19 April 2015). "China's Xi in Pakistan to cement huge infrastructure projects, submarine sales". McClatchy News (Islamabad: mcclatchydc).
- ↑ "CPEC made part of China's 13th 5-year development plan: Weidong". Pakistan Today. 23 November 2015. http://www.pakistantoday.com.pk/2015/11/23/business/cpec-made-part-of-chinas-13th-5-year-development-plan-weidong. பார்த்த நாள்: 6 March 2016.
- ↑ "China's landmark investments in Pakistan". The Express Tribune. 21 April 2015. http://tribune.com.pk/story/873627/chinas-landmark-investments-in-pakistan/. பார்த்த நாள்: 21 April 2015.
- ↑ Shah, Saeed. "Big Chinese-Pakistani Project Tries to Overcome Jihadists, Droughts and Doubts". The Wall Street Journal. http://www.wsj.com/articles/big-chinese-pakistani-project-tries-to-overcome-jihadists-droughts-and-doubts-1460274228.
- ↑ Rakisits, Claude (Fall 2015). "A Path to the Sea: China's Pakistan Plan". World Affairs Journal. http://www.worldaffairsjournal.org/article/path-sea-china%E2%80%99s-pakistan-plan. பார்த்த நாள்: 6 March 2016.
- ↑ Khan, Bilal (3 December 2015). "Pakistan's economy is turning a corner". Standard Charter Bank. https://www.sc.com/BeyondBorders/pakistan-economy/. பார்த்த நாள்: 14 March 2016.
- ↑ Shah, Saeed (20 April 2015). "China's Xi Jinping Launches Investment Deal in Pakistan". The Wall Street Journal. http://www.wsj.com/articles/chinas-xi-jinping-set-to-launch-investment-deal-in-pakistan-1429533767. பார்த்த நாள்: 23 April 2015.
- ↑ Salman, Rafi (23 October 2016). "A new 'East India Company' in the making?". www.atimes.com. Archived from the original on 19 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 22 November 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Economic corridor: China to extend assistance at 1.6 percent interest rate". Business Recorder. 3 September 2015 இம் மூலத்தில் இருந்து 2 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170102163021/http://www.brecorder.com/market-data/stocks-a-bonds/0/1223449. பார்த்த நாள்: 6 March 2016.
- ↑ "Karachi to Lahore Motorway Project Approved". Dawn. The Dawn Media Group. 2014. பார்க்கப்பட்ட நாள் 5 September 2014.
- ↑ "Railway track project planned from Karachi to Peshawar". Pakistan Tribune. 13 November 2015. http://paktribune.com/news/Railway-track-project-planned-from-Karachi-to-Peshawar-275016.html. பார்த்த நாள்: 6 March 2016.
- ↑ "CPEC may get extra billion dollars". Pakistan: The Nation. 22 June 2015. http://nation.com.pk/national/22-Jun-2015/cpec-may-get-extra-billion-dollars. பார்த்த நாள்: 11 December 2015.
- ↑ Zhen, Summer (11 November 2015). "Chinese firm takes control of Gwadar Port free-trade zone in Pakistan". South China Morning Post. http://www.scmp.com/business/companies/article/1877882/chinese-firm-takes-control-gwadar-port-free-trade-zone-pakistan. பார்த்த நாள்: 11 December 2015.
- ↑ 17.0 17.1 Shah, Saeed (9 April 2015). "China to Build Pipeline From Iran to Pakistan". The Wall Street Journal. http://www.wsj.com/articles/china-to-build-pipeline-from-iran-to-pakistan-1428515277. பார்த்த நாள்: 6 December 2015.
- ↑ 18.0 18.1 "Electricity shortfall increases to 4,500 MW". Dunya News. 29 June 2015. http://dunyanews.tv/en/Pakistan/286627-Electricity-shortfall-increases-to-4500-MW. பார்த்த நாள்: 11 December 2015.
- ↑ Malik, Ahmad Rashid (7 December 2015). "A miracle on the Indus River". The Diplomat. http://thediplomat.com/2015/12/a-miracle-on-the-indus-river/. பார்த்த நாள்: 11 December 2015.
- ↑ "Parliamentary body on CPEC expresses concern over coal import". Daily Time. 19 November 2015. http://www.dailytimes.com.pk/national/19-Nov-2015/parliamentary-body-on-cpec-expresses-concern-over-coal-import. பார்த்த நாள்: 11 December 2015.
- ↑ "Quaid-e-Azam Solar Park: Solar energy's 100MW to arrive in April". The Express Tribune. 27 March 2015.
- ↑ Ramachandran, Sudha (16 November 2016). "CPEC takes a step forward as violence surges in Balochistan". www.atimes.com. Archived from the original on 27 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 November 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://uk.reuters.com/article/uk-pakistan-economy-cpec-idUKKBN13I1Y2?il=0
- ↑ https://www.thenews.com.pk/print/169458-CPEC-has-changed-economic-outlook-of-Pakistan-S-Asia
- ↑ http://www.pakistantoday.com.pk/2016/12/04/features/what-pakistan-gains-from-cpec/
- ↑ http://www.ndtv.com/world-news/chinese-navy-ships-to-be-deployed-at-pakistans-gwadar-port-1630354
- ↑ http://www.dawn.com/news/1302102/pakistan-navys-special-task-force-88-set-up-to-guard-gwadar-ports-sea-lanes
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2017-01-15.