சீனிவாசபுரா வட்டம்
இடம்
சீனிவாசபுரம் வட்டம் (Srinivasapuram Taluk) என்பது கருநாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இதனை கோலார், முள்பாகிலு, சிந்தாமணி ஆகிய வட்டங்களும், ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டமும் சூழ்ந்துள்ளன. இது 860 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம சீனிவாசபுராவில் உள்ளது. [1]
இதை ஐந்து வருவாய்க் கோட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை சீனிவாசபுரா, ரோனூர், நெலவங்கி, ராயலபாடு, யெல்தூர் ஆகியன. இந்த வட்டத்தில் 296 ஊர்களும் ஒரு நகராட்சியும் உள்ளன. [1]