சீனிவாசப்பெருமாள் கோயில், பாபநாசம்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்
சீனிவாசப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில்அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். [1] [2]
சீனிவாசப் பெருமாள் கோயில் | |
---|---|
சீனிவாசப் பெருமாள் கோயில், பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு | |
புவியியல் ஆள்கூற்று: | 10°55′39″N 79°15′49″E / 10.9274°N 79.2637°E |
பெயர் | |
பெயர்: | சீனிவாசப் பெருமாள் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | பாபநாசம் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சீனிவாச பெருமாள் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதசி |
அமைப்பு
தொகுதஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் நகரில் அமைந்துள்ள இக்கோயிலின் கிழக்கு வாயிலில் மூன்று நிலை கோபுரம் உள்ளது. [3] இக்கோயிலில் இரு திருச்சுற்றுகள் உள்ளன. கோயிலின் அருகில் கோயில் குளம் உள்ளது.[4]
விழாக்கள்
தொகுஇக்கோயிலில் திருவோணம் ஆடி பௌர்ணமி (சூலை-ஆகஸ்டு), தை பௌர்ணமி (சனவரி-பிப்ரவரி), அனுமன் செயந்தி, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்டு-செப்டம்பர்), நவராத்திரி (செப்டம்பர்-அக்டோபர்) போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.-[3]
குடமுழுக்கு
தொகுஇக்கோயிலின் குடமுழுக்கு 2017இல் நடைபெற்றது.[3]