சீனிவாச ராமானுஜன் 125 (நூல்)

சீனிவாச ராமானுஜன் 125 என்னும் நூல் கணித ஆசிரியரும் எழுத்தாளருமான இரா. நடராசன் என்பவரால் எழுதப்பட்டதாகும். இராமனுசனின் 125 ஆவது பிறந்த நாளின் முன்னோட்டமாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை 125 பத்திகளில் குழந்தைகளுக்குச் சுருக்கிக் கூறுவதே இந்நூலின் நோக்கம் ஆகும்.

சீனிவாச ராமானுஜன் 125
நூல் பெயர்:சீனிவாச ராமானுஜன் 125
ஆசிரியர்(கள்):இரா. நடராசன்
வகை:கட்டுரை
துறை:வாழ்க்கை வரலாறு
காலம்:அக்டோபர் 2012
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:48
பதிப்பகர்:புக்ஸ் ஃபார் சில்ரன்
பதிப்பு:முதற்பதிப்பு

தமிழகத்தில் ஈரோட்டில் பிறந்து கடும் வறுமை, புறக்கணிப்பு, அலைவுறுதல்களின் ஊடாக மாபெரும் கணித மேதையாக பரிணமித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சீனிவாச இராமானுஜம் வாழ்வின் 125 முக்கிய சம்பவங்களை எளிய வடிவத்தில் ஆயிஷா இரா. நடராசன் வாசர்களுக்கு தந்துள்ளார் [1] என்னும் குறிப்புரையோடு இந்நூல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இராமானுசன் வாழ்க்கையையோடு தொடர்புடைய 22 படங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. இராமானுசனின் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்காக ஐந்து நூல்கள் இந்நூலின் இறுதியில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.

சான்றடைவு

தொகு
  1. நடராசன் இரா; சீனிவாச ராமானுஜன் 125; புக் ஃபார் சில்ரன்ஸ், சென்னை; மு.பதிப்பு அக்டோபர் 2012; நூலட்டை