இரா. நடராசன்
ஆயிஷா நடராசன் (எ) இரா. நடராசன் (Era Natarasan) 2014-ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளர் .[1] இவர் எழுதிய ஆயிஷா எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த ஆயிஷா சிறுகதை இவருடைய இரா. நடராசன் சிறுகதைகள் என்ற தொகுப்பிலும் தனிநூலாகவும் கிடைக்கிறது. எளிய தமிழில் அறிவியல் கருத்துகளையும், சில மொழி பெயர்ப்பு நூல்களையும், மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய அறிவியல் சோதனைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
இரா நடராசன் Era Natarasan | |
---|---|
![]() | |
தாய்மொழியில் பெயர் | இரா நடராசன் |
பிறப்பு | 8 திசம்பர் 1964 இலால்குடி, Trichy, தமிழ்நாடு, India |
படித்த கல்வி நிறுவனங்கள் | சமால் முகமது கல்லூரி (1982–85) |
பணி | குழந்தைகள் எழுத்தாளர் |
பட்டம் | தலைமையாசிரியர் |
விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2014) |
கையொப்பம் | ![]() |
வலைத்தளம் | |
eranatarasan |
வாழ்க்கைக் குறிப்பு தொகு
இயற்பியல், கல்வியியல் மேலாண்மை, உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர் [2] மற்றும் எழுத்தாளர். கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இரா,நடராசன் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் 'புத்தகம் பேசுது' மாத இதழின் ஆசிரியர்.
சிறுகதைகள் தொகு
இவரின் சிறுகதைகள் உலகளாவிய வாசகர் கவனத்தை ஈர்த்தவை. தமிழ் மொழியில் எழுதப்பட்ட இக்கதைகளில் சில தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உலகச் சிறுகதை தொகுதிகள் சிலவற்றில் இவரின் சில கதைகள் இடம் பெற்றுள்ளன. இவைகளில் நான்கு கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுப் பன்னாட்டுப் பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளன.[3]
அங்கீகாரங்களும் விருதுகளும் தொகு
புத்தகங்கள் தொகு
- இரா. நடராசன் சிறுகதைகள்
- ஆயிஷா
- இது யாருடைய வகுப்பறை...?
- ஹிக்ஸ் போசான் வரை இயற்பியலின் கதை
- 10 எளிய இயற்பியல் சோதனைகள்
- 10 எளிய வேதியியல் சோதனைகள்
- 10 எளிய உயிரியல் சோதனைகள்
- ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்
- கணிதத்தின் கதை
- நம்பர் பூதம்
- சீனிவாச ராமானுஜன் 125
- விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்
- கலிலியோ (நாடகம்)
- பிரெடரிக் டக்ளஸ் - அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை (மொழிபெயர்ப்பு)
இவை தவிர்த்து மேலும் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
மேலும் காண்க தொகு
சான்றுகள்: தொகு
- ↑ 1.0 1.1 "ஆயிஷா நடராஜனுக்கு சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது!". 25 ஆகத்து 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ஹிக்ஸ் போசான் வரை இயற்பியலின் கதை" எனும் இவருடைய நூலின் பின்னட்டை வாசகங்களிலிருந்து.
- ↑ இரா.நடராசன் சிறுகதைகள் எனும் நூலின் உள் அட்டையில் இருந்து
- ↑ "Bal Sahithya Akademi winner dedicates award to book-loving children". The Hindu. 2014. 25 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Bal Sahitya Puraskar Award". Sahitya Academy, Government of India. 2015. 30 June 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Ayesha Natarasan". Barathi Puthakalayam, India. 1999.
- ↑ "Ayesha-English" (PDF). A foreword written by author ERA. NATARAJAN, India. 1999.
- ↑ "Ayesha -Tamil". A foreword written by author ERA. NATARAJAN, India. 1999.