ஆயிசா (நூல்)
(ஆயிஷா (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆயிசா என்பது இரா. நடராசன் எழுதி 2011-இல் வெளியான ஒரு சிறுகதை ஆகும். இந்நூல் ஒரு விஞ்ஞான நூலின் முன்னுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.[1] ஆயிஷா (நூல்). ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்று குறிப்பிடப்பட்டு இச்சிறுகதை தொடங்குகிறது..
ஆயிசா (நூல்) | |
---|---|
ஆசிரியர்(கள்): | இரா. நடராசன் |
வகை: | சிறுகதை |
இடம்: | இந்தியா |
மொழி: | தமிழ் |
தொடர்: | சிறுகதை |
பக்கங்கள்: | 10 |
பதிப்பகர்: | பாரதி புத்தகாலயம் |
பதிப்பு: | 2011 |
உள்ளடக்கம்
தொகுஇந்நூலில் ஆயிசா எனும் சிறுமி தன்னுடைய அறிவியல் ஆர்வத்தின் காரணமாக, ஆசிரியர்களிடம் கேள்விகள் பல கேட்பதும், அதனைக் குறித்து ஆசிரியர்கள் மகிழ்வுறாமல் அவளை அடக்கி வைப்பதும் விவரிக்கப்படுகிறது. பின் ஆயிசா பரிச்சாயத்தமான செய்யும் முயற்சியில் இறந்துவிடுவதும், அதன் பிறகு அவளின் ஆசிரியை மனம் திருந்தி மாணவர்களுக்கு விஞ்ஞானத்தினை அணுகுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.