சீன ஒய்யார வாரம்
சீன ஒய்யார வாரம் (China Fashion Week) ஆண்டுக்கு இரு முறை சீனாவில், பீஜிங்கில் பல இடங்களில் கொண்டாடப்படுகின்ற உலகளாவிய ஒய்யார வாரமாகும். [1] 1997இல் ஆரம்பமான இவ்விழாவின்போது தொழில்சார்ந்த போட்டிகள், கண்காட்சிகள், தொழில்சார்ந்த மதிப்பீடுகள் நடத்தப்பெறுகின்றன. [2] பல வடிவமைப்பாளர்களுடைய சேகரிப்புகள் இந்நிகழ்வின்போது காட்சிப்படுத்தப்படும். அவற்றில் ஆயத்த ஆடைகள், துணைப் பொருள்கள், புதிய வடிவங்கள் போன்றவை காணப்படும். [2] சீன ஒய்யார அமைப்பால் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் இதற்கான நாள்கள் குறிக்கப்படுகின்றன.
சீன ஒய்யார வாரம் | |
---|---|
வகை | ஆடை மற்றும் ஒய்யார காட்சிப்பொருள்கள் |
காலப்பகுதி | ஆண்டுக்கு இரு முறை, ஆண்டுக்கொரு முறை |
அமைவிடம்(கள்) | பீஜிங், சீனா |
துவக்கம் | 1997 |
மெர்சிடஸ்-பென்ஸ் |
2017 டிசம்பர் வரை பீகிங்கில் 957 ஒய்யாரக் கண்காட்சிகள் நடத்தப்பெற்றுள்ளன. அதில் ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த 3200க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்களும், மாடல்களும் கலந்துகொண்டனர். [2]
ஒய்யார விருதுகள்
தொகுசீன ஒய்யார வார விருதுகள் கீழ்க்கண்ட நான்கு வகைகளில் அமைகின்றன. [3] :
- டிசைனர் விருதுகள் (மிகச்சிறந்த ஒய்யார வடிவமைப்பாளர் மற்றும் உயரிய 10 ஒய்யார வடிவமைப்பாளர் விருதுகள் உட்பட)
- பேஷன் மாடல் விருதுகள் (மிகச்சிறந்த பேஷன் மாடல் மற்றும் உயரிய 10 பேஷன் மாடல் விருதுகள் உட்பட)
- பேஷன் எலைட் விருதுகள் (மிகச்சிறந்த பேஷன் புகைப்பட நிபுணர், மிகச்சிறந்த பேஷன் வர்ணனையாளர் மற்றும் மிகச்சிறந்த ஸ்டைலிஸ்ட் விருதுகள் உட்பட)
- பிராண்ட் விருதுகள்
முந்தைய ஒய்யார வாரத்திற்கான நோக்கங்கள்
தொகு- 2014 : மாசினைக் கட்டுப்படுத்துகின்ற முகமூடிகளை ஆடை வடிவமைப்பிலும், காட்சிகளிலும் மேற்கொள்ளல் .[4]
- 2013: விழிக்கான அலங்காரம்; சீனாவின் புகழ்பெற்ற ஒப்பனைக்கலைஞரான மாவோ ஜெப்சிங், போலி கண் புருவங்களை வித்தியாசமான பொருள்களைக் கொண்டு உருவாக்கினார். [5]
- 2012: டங் ஜிங்; டங் வம்சம் : 2012இல் நிகழ்த்தப்பட்ட வசந்த/கோடைக்கால வாரம் இறந்த காலத்தை நிகழ் காலத்தோடு இணைத்தது. சீனாவின் எம்பிராய்டரி மற்றும் டங் வம்சத்தாரின் ஆடைகளின் மாதிரியுடன் நவீன அலங்காரங்களை இணைத்து மேற்கொள்ளப்பட்டது. மாடலாக வந்தவர்கள் வெளிச்சமான வண்ணங்களில் நீண்ட அங்கிகளை அணிந்து வந்தனர். கி.பி.618 முதல் கி.பி. 907 வரை டங் வம்சத்தில் காணப்பட்ட உத்திகளை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். [6]
2014 விழா அமைப்பாளர்கள்
தொகுசீன தேசிய ஆடை சங்கம் : 1991இல் தொடங்கப்பட்ட சீனாவின் ஆடைத்தொழிற்சாலையில் ஈடுபட்டுள்ள தற்சார்புள்ள, லாப நோக்கம் இல்லாத தேசிய அளவிலான 4A நிலையில் உள்ள நிறுவனம்.
மெர்சிடஸ்-பென்ஸ்: 2011இல் உலகளாவிய சீன ஒய்யார வாரம் மற்றும் நவீன மகிழ்வுந்துக்கான பிராண்ட் தலைமை. பங்குதாரர் அடிப்படையில் செயலாற்றல். உலகளாவிய சீன ஒய்யார வாரம், சீன ஒய்யார வாரத்தை உலகளாவிய அளவில் மெர்சிடஸ்-பென்ஸ் வாரங்களாக அமைத்துள்ளது. அக்டோபர் 2014இல் சீனா உலகளாவிய ஒய்யார வாரம் பீகிங்கில் (வசந்தம்-கோடை 2015இல்) கொண்டாடியது.
ஒத்த பிற நிகழ்வுகள்
தொகுசீன ஒய்யார வாரம் போலவே பெர்லின் ஒய்யார வாரம், லண்டன் ஒய்யார வாரம், மிலான் ஒய்யார வாரம், நியூயார்க் ஒய்யார வாரம், ஸ்டைல்ஹால் போன்றவை கொண்டாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cabbeen is star of Fashion Week in China". Daily News (New York). 2012-04-06. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
{{cite web}}
: Text "என்ஒய்டைய்லிநியூஸ்நியூஸ்" ignored (help) - ↑ 2.0 2.1 2.2 "Mercedes-Benz China Fashion Week". chinafashionweek.org. Archived from the original on 2018-10-31. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
- ↑ "China fashion week awards". Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
- ↑ "2014 fashion week anti pollution".
- ↑ "2013 fashion week crazy eye makeup".
- ↑ "Traditional, ancient accents at China Fashion Week". Archived from the original on 2015-11-26. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.