சீன மெய்யியல்
சீன மெய்யியல் (Chinese philosophy) "நூறு சிந்தனைப் பள்ளிகள்" காலம் எனப்பட்ட போரிடு அரசுகள் காலத்தில் தோன்றியது. இக்காலம் இளவேனில், இலையுதிர் காலம் எனவும் சீன வரலாற்றில் அழைக்கப்படுகிறது.[1] இக்காலம் கணிசமான அறிவு வளர்ச்சியும் பண்பாட்டு வளர்ச்சியும் ஏற்பட்ட காலமாகும்.[1] சீன மெய்யியலின் பெரும்பகுதி இக்காலத்தில் தோன்றினாலும் சீன மெய்யியலின் சில கூறுகள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே நிலவி வந்துள்ளன; சில கூறுகள் யி யிங் எனப்படும் மாற்றங்களின் நூலில் உள்ளன. இந்நூல் இறைமை குறித்த கி.மு 672 ஆம் ஆண்டின் பண்டைய தொகுப்பு நூலாகும்.[2] இந்த போரிடு அரசுகளின் காலத்தில் தான் சிமா தான் எனபவர் பல பெரிய சீன மெய்யியல் பள்ளிகளின் பெயரைக் குறிப்பிடுகிறார். அப்போது, கன்பூசியனியம், சட்டவியம், தாவோவியம் என்பனவற்றோடு, பின்னர் மறைந்த பலவும் தோன்றின.பின் மறைந்தவற்றில் வேளாணியம், மோகியம், சீன இயற்கையியப் பள்ளி, சீன அளவையியல் (ஏரணப்) பள்ளி ஆகியன அடங்கும்.[3].
சீன மெய்யியல் | |||||||||||||||||||||||||||||
சீன குவாங்சி மாகாண நான்னிங் நகரத்தின் முகப்பில் பாவிய யின், யாங் குறியீகும் பாகுவா குறியீடுகளும். | |||||||||||||||||||||||||||||
பண்டைய சீனம் | 中國哲學 | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நவீன சீனம் | 中国哲学 | ||||||||||||||||||||||||||||
|
தொடக்க நம்பிக்கைகள்
தொகுசாங் அரச மரபின் தொடக்கநிலைச் சிந்தனை சுழற்சிகளை அடிப்படையாக்க் கொண்டிருந்தது. இக்கருதுபாடு சாங் அரச மரபு மக்கள் தம்மைச் சூழ நடந்தநிகழ்ச்சிகளின் நோக்கீட்டால் முகிழ்த்தது; குறிப்பாக, இரவு பகல் சுழற்சி, பருவச் சுழற்சி, நிலாவின் வளர்தல் தேய்தல் சுழற்சி போன்ற இயற்கை சுழற்சிகளைப் பார்த்து உருவாகியது எனலாம். எனவே, இந்த கருத்தோட்டம் சீன வரலாறு முழுவதுமே பொருந்தி, இயற்கையின் இயல்பை எதிர்பலிக்கிறது. இது மேற்கத்திய மெய்யியலுக்கு எதிர்முரண் தன்மை கொண்டதாகும். ஆனால், மேலை மெய்யியலில் முன்னேற்றம் காலத்தைச் சார்ந்து நேரியல்பானதாகும். சாங் காலத்தில் ஊழ் (விதி) சீனப் பெருதெய்வங்களால் (கடவுள்களால்) தமக்கேற்ப மாற்றப்பட்டுள்ளது.முன்னோர் வழிபடு நிலவியது; பரவலாகப் ஒபின்பற்ரப்பட்டது. விலங்கு பலியும் மாந்தப் பலியும் தரப்பட்டன.
சாங் அரச மரபை சவு அரச மரபு வீழ்த்தியதும், புதிர அரசியல், சமய, மெய்யியல் கருத்துப்படிமம் உருவாகி, அது வானுலகக் கட்டளை என அழைக்கப்பட்டது. அரசர்கள் தம் அதிகாரநிலையைக் காத்துகொள்ள முடியாமல் போனபோது இக்கட்டளை முன்னிறுத்தப்பட்டு, சவு ஆட்சி தொடர்வதற்கான கூர்மையான நெறிப்பாடு ஆக மாறியது. இந்த காலகட்டத்தில், எழுத்தறிவு தோன்றி பரவலானதற்கும் சாங்தி எனும் மரபுவழி சீன சமய மீவுயர் இருப்பாளர் ந்ம்பிக்கைக்கு மாறாக முன்னோர் வழிபாடு தோன்றி பரவலானதற்கும் உலகாயதப் போக்கு கோலோச்சியதற்கும் அதாவது இம்மை வாழ்வுக்கு அழுத்தம் கூடியதற்கும் தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன.
பருந்துப் பார்வை
தொகுகன்பூசியனியம் இளவேனில், இலையுதிர் காலகட்டத்தில் சீன மெய்யியலாளர் கன்பூசியசுவின்(கி.மு 551–479) பயிற்றுரைகளில் இருந்து தோன்றியது. இவர் தன்னை சவு விழுமியங்களை மீட்டுரைப்பவராக கருதினார். இவரது மெய்யியல் அறவியலையும் அரசியலையும் க்ருப்பொருள்களக்க் கொண்டிருந்தது. இது தனியர், அரசு அமைப்பு ஆகியவற்ரின் அறம், சமூக உறவுகளில் நேர்மை,, நீதி, மரபு பிறழாமை, உண்மையாக இருத்தல் ஆகிய விழுமியங்களை வற்புறுத்தியது. பல நூல்களின் சுருக்க மேற்கோள்கள் சடங்கையும் அதேவேளையில் இரென் எனும் மாந்தப் பண்பையும் முதன்மையாக வற்புறுத்துகின்றன.[4]
பண்டைய மெய்யியல்
தொகுஇளவேனில், இலையுதிர் காலகட்டம்
தொகுகன்பூசியனியம்
தொகுதாவோயியம்
தொகுபோரிட்ட அரசுகள் காலகட்டம்
தொகுசட்டவியம்
தொகுஇயற்கைவாதிகள்
தொகுமோகியம்
தொகுஏரணவியலாளர்கள்
தொகுவேளாண்வாதிகள்
தொகுதொடக்க வேந்தர் கால மெய்யியல்
தொகுவரலாறு
தொகுகுவின், கான் அரச மரபுகள் காலம்
தொகு
ஆறு அரச மரபுகள் காலம்
தொகுசிந்தனைப் பள்ளிகள்
தொகுசுவான்சுயி
தொகுசான்
தொகுஇடைக்கால, பிந்தைய பேரரசு கால மெய்யியல்
தொகுவரலாறு
தொகுசிந்தனைப் பள்ளிகள்
தொகுபுதிய கன்பூசியனியம்
தொகுபுத்தியற் காலம்
தொகுமேலும் காண்க,சீனத்தேசியம்,மாவோயியம்,சீன மார்க்சிய மெய்யியல்
புதிய கன்பூசியனியம்
தொகுமாபெரும் மெய்யியல் ஆளுமைகள்
தொகு- கன்பூசியசு, மெய்யியலின் பேராளுமையாக்க் கருதப்பட்டாலும் தாவோக்களால் கேலிசெய்யப்படுகிறார்.
- மென்சிய்சு, கருத்துமுதலியச் சாய்புள்ள கன்பூசியசின் மாணவர்
- சுன்ழி, நடப்பியலுக்கு நெருக்கமானவரும் கான்பேய், இலிசி ஆகியோரின் ஆசிரியருமான கன்பூசியசின் மற்றொரு மாணவர்
- ழூசி, புதிய கன்பூசியனியத்தை நிறுவியவர்
- வாங் யாங்மிங், சின்சியூ அல்லது மனத்தின் நிலையைப் பற்றி மிகவும் பேசியவர்.
- இலாவோழி, தாவோ பள்ளித் தலைவர்.
- மோழி, மோகியப் பள்ளியை நிறுவியவர்.
- சாங்யாங், சட்டவியத்தை நிறுவியவர்; குவின் காலச் சீர்திருத்தவாதி.
- கான்பேய், சட்டவியத்தின் பெயர்பெற்ர கோட்பாட்டாளர்களில் ஒருவர்.
- இலிசி, பேரளவில் சட்டவியத்தை ஆதரித்தவரும் நடைமுறையின் பின்பற்றியவரும் ஆவார்.
- கியூனெங், சீனாவில் சான்ழென் பள்ளியின் ஆறாம் புத்தக் குரவர் ; இவர் மனம் இல்லை கருத்துப்படிமத்தை நிறுவினார்.
சீன மெய்யியலின் தனித்த கருத்துப்படிமங்கள்
தொகுதனிதனி மெய்யியல் பள்ளிகள் தம்முள் வேறுபட்டாலும் சில சொற்களும் அக்கறிகளும் பொதுவாக சீன மெய்யியலின் ஒட்டுமொத்த வழக்காற்றில் அமைகின்றன.
சீன மெய்யியலின் பொதுவான சொற்கள் பின்வருமாறு:
- 道 தாவோ (வழி அல்லது நெறி)
- 德 தே (தகைமை, அதிகாரம்)
- 理 லி (நெறிமுறை)
- 氣 குவிi (உயிர்ப்பாற்றல் அல்லது பொருள் விசை)
- தாய்யி (பெரு வான அச்சு) , யின், யாங் எனும் மிகைநிரப்பு கருத்தின முனைமைகளின் இணைவை உருவாக்குகிறது. யின் எனும் சொல் முதலில் சூரியனுக்கு அப்பால் அமைந்த மலைச்சாரலைக் குறித்தது. மெய்யியலாக, இது இருண்ட, முடங்கிய, பெண்பாலைக் குறிக்கிறது; அதே போல, யாங் என்பது சூரியனுக்கு முகப்பில் அமையும் மலைச்சாரலை முன்பு குறித்தது, இப்போது மெய்யியலாக பொலிவான, செயல் முனைவான, ஆண்பாலைக் குறிக்கிறது. யின்னும் யாங்கும் பகைமுரண் வாய்ந்தனவல்ல; அவை ஒன்றுக்கொன்று அலையின் எழுச்சியும் வீழ்ச்சியும் போல மிகைநிரப்புகளாக அமைபவை. இவற்றில் ஒன்று மற்றொன்றுக்குத் தலைக்கீழான விகிதத்தில் அமைகின்றது.
சீன மெய்யியலின் பொதுவான அக்கறைகளாவன:
- இயற்கையில் இருந்து மாந்தனைப் பிரிக்காத போக்கு.
- மேலை மெய்யியல் பெரிதும் கவனம் செலுத்தும் ஒருதெய்வ நிலவலும் தன்மையும் பற்ரிய வினவல்கள், சீன மெய்யியல்களில் முதன்மையைப் பெறுவதில்லை; சீன மரபு சமயத்தில் பெரிதாக முரண்பாட்டை உருவாக்கும் வாயிலாக அமைதல் இல்லை.
- மெய்யியலின் நோக்கம் அறிவியலாகவும் நடைமுறையிலும் வழிகாட்டுதலே ஆகும்.
- அரசியல் கவனக் குவிப்பு: நூறு சிந்தனை பள்லிகளின் அறுஞர்கள் அரசர்களைத் தம்மைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் நடந்துகொள்ள அறிவுறுத்தினர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Ebrey, Patricia (2010). The Cambridge Illustrated History of China. Cambridge University Press. p. 42.
- ↑ page 60, Great Thinkers of the Eastern World, edited Ian McGreal Harper Collins 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-270085-5
- ↑ Simandan, D., 2018. Wisdom and foresight in Chinese thought: sensing the immediate future. Journal of Futures Studies. 22(3), pp. 35-50. https://doi.org/10.6531/JFS.2018.22(3).00A35
- ↑ Yuli Liu, 'Confucius', in Essentials of Philosophy and Ethics, Hodder Arnold 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-90028-8
மேலும் படிக்க
தொகு- Bo Mou (Editor), History of Chinese Philosophy, Routledge, 2009.
- Antonio S. Cua (Editor), Encyclopedia of Chinese Philosophy, Routledge, 2003.
- Feng Youlan, A History of Chinese Philosophy (Princeton Paperbacks), tr. Derk Bodde, 1983.
- Herrlee Glessner Creel, Chinese Thought, from Confucius to Mao Zedong, 1971.
- A. C. Graham, Disputers of the Tao; Philosophical Argument in Ancient China, 1989.
- Christoph Harbsmeier, Logic and Language in Ancient China, (Joseph Needham, Science and Civilisation in China, Volume 7, Part I, Cambridge University Press, 1998.
- Philip J. Ivanhoe and Bryan W. Van Norden (Editors), Readings in Classical Chinese Philosophy, 2nd edition, Indianapolis: Hackett Publishing, 2005.
- Karyn Lai, Introduction to Chinese Philosophy, Cambridge University Press, 2008.
- Lin Yutang, The Importance of Living, William Morrow Paperbacks, 1998.
- Justin Tiwald and Bryan W. Van Norden (Editors), Readings in Later Chinese Philosophy: Han Dynasty to the 20th Century, Indianapolis: Hackett Publishing, 2014.
- Bryan W. Van Norden, Introduction to Classical Chinese Philosophy, Indianapolis: Hackett Publishing, 2011.
- Arthur Waley, Three Ways of Thought in Ancient China, 1983.
வெளி இணைப்புகள்
தொகு- Article "The Chinese Concept of Space"
- Article "The Chinese Concept of Time"
- The Hundred Schools of Thought
- Chinese Text Project - Chinese philosophy texts in classical Chinese with English and modern Chinese translations
- Eastern Philosophy திறந்த ஆவணத் திட்டத்தில்
- Contesting Confucius Henry Zhao, New Left Review 44, March–April 2007
- Encyclopédie ou Dictionnaire raisonné des sciences, des arts et des métiers, 1751–1772, ""Philosophie des Chinois" [in French]
- Warp Weft and Way - A Group Blog of Chinese and Comparative Philosophy