சீமா நந்தா (Seema Nanda) என்பவர் ஓர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார். இவர் தன்னுடைய ஆராய்ச்சியில் உயிரியல், பொறியியல் மற்றும் நிதி சார்ந்த பிரச்சனைகளுக்கு கணிதத்தை பயன்படுத்தினார். கணிதவியலையும் மற்றும் கணக்கீடுகளையும் பயன்படுத்தி அன்றாட உலகியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே இவருடைய ஆராய்ச்சி ஆர்வத்தின் முதன்மை நோக்கமாகத் திகழ்கிறது [1].

கல்வி

தொகு

நியூயார்க் பல்கலைக் கழகத்தின் கோரண்ட்டு கணித அறிவியல் நிறுவனத்தில் இவர் தனது கணித கல்வியை முடித்தார். தன்னுடைய முனைவர் பட்டத்தையும் இதே அறிவியல் நிறுவனத்தில் 1998 ஆண்டு பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வு களமானது. நிகழ்தகவு கோட்பாடுகள் என்ற தலைப்பில் இருந்தது. சார்லசு எம் நியூமேன் என்பவர் இவருக்கு வழிகாட்டிப் பேராசிரியராக இருந்தார்.

தொழில்

தொகு

பெங்களூரிலுள்ள உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் நிறுவனத்தில் தற்போது உள்ள நிலையில் பணிபுரிவதற்கு முன்னதாக இவர் டென்னசி பல்கலைக்கழகத்திலும் ஆர்வி மத்து கல்லூாரியிலும் பல்துறை கல்விசார் பதவிகளை வகித்தார். நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு முதலீடு வங்கியில் அளவீட்டு பகுப்பாய்வாளராக பணியில் இருந்த இவர், கூட்டுருவாக்க பெருநிறுவனத்தில் பணியாற்றுவதில் இருந்து விடுபட்டு 2004 ஆம் ஆண்டில் கல்வி ஆராய்ச்சியாளராக பணியாற்றுவதற்கு முன்வந்தார். தற்போது இந்திய இளைஞர்களை கணிதம் மற்றும் அறிவியல் துறைகளில் ஆர்வம் காட்ட ஊக்குவித்து வருகிறார். கல்வியின் மூலம் பெண்களின் நிலையை மேம்படுத்த 2012 இல் லியோரா அறக்கட்டளை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.

விருதுகள்

தொகு

1996-ஆம் ஆண்டில் இவருக்கு [[பெல்லா மான்னல் பரிசு வழங்கப்பட்டது. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இப்பரிசு கொடுக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு


வெளிஇணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_நந்தா&oldid=2775147" இலிருந்து மீள்விக்கப்பட்டது