சீமா ரிசுவி
இந்திய அரசியல்வாதி
சீமா ரிசுவி (Seema Rizvi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய சனதா கட்சியின் தலைவராக இவர் இருந்தார். உத்தரபிரதேச சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 2002 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி முதல் 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 29 ஆம் தேதி வரை மாயாவதி தலைமையிலான அமைச்சகத்தில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான தனி பொறுப்புடன் மாநில அமைச்சராகப் பணியாற்றினார் [1] [2] இலக்னோ பல்கலைக்கழகத்தின் உருது மொழி துறையில் பேராசிரியராக இருந்தார். [3] [4]
சீமா ரிசுவி Seema Rizvi | |
---|---|
உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினர் | |
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் தனி பொறுப்பைக் கொண்ட மாநில அமைச்சர் | |
பதவியில் மே 3, 2002 – ஆகத்து 29, 2003 | |
தொகுதி | உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
பெற்றோர் | ஐசாசு ரிசுவி (தந்தை) |
தொழில் | பேராசிரியர் மற்றும் அரசியல்வாதி |
ஆகஸ்ட் 11, 2009 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 11 ஆம் தேதியன்று ரிசுவிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சட்டமன்றத்தில் தனது இருக்கையில் சரிந்து விழுந்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "14th Vidhan Sabha Sadashya Parichay.". http://uplegisassembly.gov.in/Members/pdfs/14th_vs_sadashya_parichay.pdf.
- ↑ "Sheema Rizvi passes away". https://timesofindia.indiatimes.com/city/lucknow/Sheema-Rizvi-passes-away/articleshow/4912920.cms.
- ↑ Tandon, Usha. "Population Law: An Instrument for Population Stabilisation". https://books.google.com/books?id=doqlzVqyZfUC&dq=sheema+rizvi&pg=PA445.
- ↑ "Govt flayed for disappearance of children". https://www.hindustantimes.com/india/govt-flayed-for-disappearance-of-children/story-cllEMU9aePp8PPXJ6rzV5H.html.
- ↑ "Sheema Rizvi passes away | Lucknow News - Times of India" (in ஆங்கிலம்). TNN. Aug 20, 2009. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.