சீம் மண்டலம்

சீம் மண்டலம் (எபிரேய: מרחב התפר) என்பது அரபு-இஸ்ரேல் போரின் போது இஸ்ரேலால் ஜோர்தானிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும்.[1] இது மேற்குக் கரையின் தெற்கில் உள்ளது. இப்பகுதியில் அரேபியர்களும், இஸ்ரேலியக் குடியிருப்புகளும் உள்ளது..2006ம் ஆண்டு நிலவரப்படி, இம்மண்டலத்தில் பெரும்பான்மையாக 3,81,000 பேர்கள் கொண்ட யூதக்குடியேற்றங்களும் மற்றும் 57,000 பாலஸ்தீனர்கள் உள்ளனர்.[2] இம்மண்டலம் மேற்குக் கரையின் மற்ற பகுதிகளிலிருந்து முள்வேலிகள், சுவர்கள் மற்றும் அகழிகளால் பிரிக்கப்பட்டுள்ளது. யூதர்கள் தவிர்த்து பிற சமயத்தவர்கள் எளிதில் அணுக முடியாத அள்விற்கு சீம் மண்டலம் பாதுகாப்பாக உள்ளது. சீம் மண்டலம், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. யூதர் அல்லாதவர்கள் இம்மண்டலத்தில் வாகனங்களில் பயணிக்க முன் அனுமதி பெற வேண்டும்.

மேற்குக் கரைக்கு தென்கிழக்கில் உள்ள சீம் மண்டலத்தின் அமைவிடம் (பச்சை-நீல நிறத்தில்)

அமைவிடம்

தொகு

சீம் மண்டலத்தின் மேற்கில் ஜோர்தான், வடக்கில் மேற்குக் கரை, கிழக்கிலும், தெற்கிலும் இஸ்ரேல் எல்லைகளாக உள்ளது. இது சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "The Separation Barrier – Statistics". B'Tselem. 16 July 2012. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
  2. Margarat Evans (6 January 2006). "Indepth Middle East:Israel's Wall (according to the ICJ Wall Case opinion)". Canadian Broadcasting Corporation. பார்க்கப்பட்ட நாள் 2007-05-11.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீம்_மண்டலம்&oldid=4108843" இலிருந்து மீள்விக்கப்பட்டது