ஸீரோ டிகிரி

(சீரோ டிகிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸீரோ டிகிரி என்பது எழுத்தாளர் சாரு நிவேதிதாவால் எழுதப்பட்ட பின்நவீனத்துவ பாணி புதினம் ஆகும். அ-நேர்கோட்டுப் பாதையில் பயணிக்கும் இப்புதினம் அதிர்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுகளை வாசகனுக்கு அளித்துச் செல்கின்றது. பரவலான விமர்சனத்திற்கும் வாசிப்பிற்கும் உள்ளான இப்புதினம் மலையாள மொழியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.[1][2][3]

ஸீரோ டிகிரி முகப்பு அட்டை

அறிமுகம்

தொகு

தொலைபேசி பாலியல் உரையாடல்கள், கொடுங்கனவுகளின் சித்திரவதைக் காட்சிகள், மென்மையான காதல் கவிதைகள், எண் கணிதம், புராணங்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க அறிவுஜீவிகளின் கட்டாய பெயர் நீக்கம் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கிய இந்த நாவல் அதன் சோதனை பாணிக்காக அறியப்படுகிறது. இது மனிதகுலத்தின் ஆழமான மனக் காயங்கள் வழியாக தொடர்கின்ற பயணம், மனித அனுபவங்கள் மற்றும் யதார்த்ததின் எல்லைகளை ஆராய்கிறது.

விருதுகள்

தொகு
ஆண்டு விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் அளித்தவர்கள் குறிப்புகள்
2013 ஜான் மிக்கல்ஷ்கி விருது[4][5]

(Jan Michalski Prize)

2013ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது
2013 50 எழுத்தாளர்கள், 50 புத்தகங்கள் -

சிறந்த இந்திய புதினங்கள்

ஹாப்பர் காலின்ஸ் (HarperCollins) பதிப்பகம் வெளியீடு சிறந்த 50 நூல்களில் ஸீரோ டிகிரியும் இடம்பெற்றுள்ளது.
2014 முக்கியமான புதினம் தி சண்டே கார்டியன்

( The Sunday Guardian)

உருவகப்படுத்துதல் வகை நூல்களில் முக்கியமானதாக கருதப்பட்டது.
2017 15க்கும் குறைவான ஆகச்சிறந்த இந்திய புதினங்கள் மென்எக்ஸ்பீ.காம்

(Mensxp.com)

மேற்கோள்கள்

தொகு
  1. Jan Michalski Prize for Literature 2013 http://www.fondation-janmichalski.com/en/prix-jan-michalski/edition-2013/
  2. Tarun Tejpal, one of the juries of Jan Michalski 2013, on Zero Degree http://www.fondation-janmichalski.com/wp-content/uploads/2013/07/Synthese_Charu-Nivedita_engl.pdf
  3. தி இந்து's review of 50 Writers, 50 Books - The Best of Indian Fiction http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-literaryreview/the-best-of-indian-fiction/article4890205.ece
  4. "Edition 2013 – Fondation Jan Michalski". www.fondation-janmichalski.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2025-01-19.
  5. "Wayback Machine" (PDF). www.fondation-janmichalski.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸீரோ_டிகிரி&oldid=4193083" இலிருந்து மீள்விக்கப்பட்டது