சீலாந்து சண்டை
சீலாந்து சண்டை (Battle of Zeeland) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை ஆகும். இது நெதர்லாந்து சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் படைகள் நெதர்லாந்தின் சீலாந்துப் பகுதியைத் தாக்கிக் கைப்பற்றின.
சீலாந்து சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
நெதர்லாந்து சண்டையின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நெதர்லாந்து பிரான்சு ஐக்கிய இராஜ்யம் | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஹென்றி வின்கெல்மான் ஹென்ரீக் ஜான் வான் டெர் ஸ்டாட் ஆன்றி கிராட் | பவுல் ஹாசர் ஆஸ்கார் வான் டெம் ஹேகன் |
||||||
பலம் | |||||||
10,000 நெதர்லாந்து படைகள் 15,000 பிரிஞ்சுப் படைகள் | 7,500 | ||||||
இழப்புகள் | |||||||
நெதர்லாந்து: 38 (மாண்டவர்) 115~ (காயமடைந்தவர்) மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர் / தப்பினர் பிரான்சு: 229 (மாண்டவர்) 700~ (காயமடைந்தவர்) 3,000~ போர்க்கைதிகள் பிரிட்டன்: தெரியவில்லை | 97 (மாண்டவர்) 300~ (காயமடைந்தவர்) |
மே 10, 1940 அன்று ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் தொடங்கியது. பெல்ஜியம், பிரான்சு, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகளையும் ஒரே நேரத்தில் ஜெர்மானியப் படைகள் தாக்கின. நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு மே 14ம் தேதி நெதர்லாந்திய அரசு சரணடைந்தது. ஆனால் அந்நாட்டு சீலாந்து மாகாணத்திலிருந்த படைகள் சரணடைய மறுத்து விட்டன. மேலும் நான்கு நாட்கள் ஜெர்மானியரை எதிர்த்துப் போரிட்டு வந்தன. அவர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் இச்சண்டையில் பங்கேற்றன. ஆனால் மேற்குப் போர்முனையெங்கும் ஜெர்மானியப் படைகள் எளிதில் வெற்றி பெற்றதால், சீலாந்து பிரதேசத்தில் நெதர்லாந்துப் படைகளின் எதிர்ப்பு அர்த்தமற்றுப் போனது. மே 18ம் தேதி சுற்றி வளைக்கப்பட்ட நெதர்லாந்துப் படைகள் சரணடைந்தன.