சுகநலக் கல்வி

நோய்த்தடுப்பு, பொதுச் சுகாதாரம் பற்றி மக்களுக்கு அறிவூட்டல் சுகநலக் கல்வி (Health Education) எனப்படும். இத் துறையில் சுற்றுச்சூழல் சுகாதாரம், உடல் ஆரோக்கியம், சமூக சுகாதாரம், உணர்வு சார் சுகாதாரம், அறிவுசார் ஆரோக்கியம், மற்றும் ஆன்மீகம் என்பன உள்ளடக்கப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலன் இறுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, ’சுகநலக் கல்வியின் நோக்கம் பெரும்பாலும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பானதாகவே இருந்தது. 1970 களில் இந்நிலை மாறி நோய், மரணம், மற்றும் உயரும் சுகாதார செலவுகளை சிறந்த சுகாதார ஊக்குவிப்பு மற்றும் நோய் தடுப்பில் போதிய கவனம் மூலம் குறைக்க முடியும் என உணரப்பட்டது. எனினும் புதிய அணுகுமுறைக்கு ஏற்ப சுகாதார கல்வியை வழங்கிபவர்கள் செயற்படுகிறார்களா என்பது சந்தேகமானதே.

சுகநலக் கல்வி மக்களில் இருந்தே தொடங்குகிறது. சுகாதாரம் அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் உதவியாக இருக்கலாம் என்ன ஆர்வமூட்டுவது முதற்படியாகும். இதன் மூலம் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் தங்களை சுகாதார நிலைமைகள் தொடர்பாகப் பொறுப்பு உணர்வுடன் இருக்கும் நிலை ஏற்படுகிறது. அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் சுகநலக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு விரிவான சுகநலக் கல்வித்திட்டம் மாணவர்கள் சுகாதார பிரச்சினைகள் தொடர்பான விமர்சனங்களை விரும்பத்தக்க மனோபாவத்தை ஏற்படுத்துவதோடு மற்றும் சுகநல நடைமுறைகள் அடையவும் உதவும்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகநலக்_கல்வி&oldid=3697722" இலிருந்து மீள்விக்கப்பட்டது