சுகார்ப்பியோனைட்டு
சுகார்ப்பியோனைட்டு (Skorpionite) என்பது Ca3Zn2(PO4)2CO3(OH)2·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். துத்தநாகம் பாசுப்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நமீபியா நாட்டின் சுகோர்ப்பியன் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் சுகார்ப்பியோனைட்டு என்று கனிமத்திற்குப் பெயரிடப்பட்டது.
சுகார்ப்பியோனைட்டுSkorpionite | |
---|---|
சுகார்ப்பியோனைட்டு | |
பொதுவானாவை | |
வகை | பாசுப்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca3Zn2(PO4)2CO3(OH)2·H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
படிக இயல்பு | ஊசி போன்ற படிகங்கள் [001] இணையாக; தகடு, கத்தி வடிவம் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
முறிவு | ஒழுங்கற்று / சமமற்று |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 3 1⁄2 |
மிளிர்வு | பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
அடர்த்தி | 3.15 கி/செ.மீ3 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.588 nβ = 1.645 nγ = 1.646 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.057 |
2V கோணம் | 15.0° (அளக்கப்பட்டது) |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சுகார்ப்பியோனைட்டு கனிமத்தை Skr[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Skorpionite: Skorpionite mineral information and data". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2015-11-25.
- ↑ "Skorpionite". Handbook of Mineralogy. (1990–2013). Chantilly, VA: Mineralogical Society of America.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.