சுக்ஜித் சிங் (இராணுவ வீரர்)

இந்தியைராணுவ வீரர்

சுக்ஜித் சிங் (Sukhjit Singh) (பிறப்பு அக்டோபர் 15,1934) ஓர் முன்னாள் இந்திய இராணுவ அதிகாரியாவார். 1971 இல் நடைபெற்ற இந்தியா-பாக்கிஸ்தான் போரில் பசந்தர் என்ற இடத்தில் எதிரிகளை எதிர்கொண்டதில் இவரது தலைமை மற்றும் தைரியத்திற்காக, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான மகா வீர சக்கரம் இவருக்கு வழங்கப்பட்டது.[2]

சுக்ஜித் சிங்
பிறப்புஅக்டோபர் 15, 1934 (1934-10-15) (அகவை 89)
பெங்களூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா (தற்போதைய கருநாடகம், இந்தியா)
படித்த கல்வி நிறுவனங்கள்இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடம்
பட்டம்கபுர்தலாவின் இளவரசன்
முன்னிருந்தவர்இளவரசன் பரம்ஜித் சிங்
பின்வந்தவர்இளவரசன் சத்ருஜித் சிங்
சமயம்சீக்கியம்
வாழ்க்கைத்
துணை
இளவரசி கீதா தேவி (1958) பின்னர் பிரிந்தனர் (1977)
இராணுவப் பணி
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
தரம் படைப்பகுதித் தலைவர்
போர்கள்/யுத்தங்கள்பசந்தர் போர் - 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
விருதுகள் மகா வீர சக்கரம்[1]

ஆரம்பகால வாழ்க்கை.

தொகு

இளவரசர் சுக்ஜித் சிங் 1934 அக்டோபர் 15 அன்று பெங்களூரில் பட்டத்து இளவரசரான பரம்ஜித் சிங் சாகிப் பகதூர் (ஜகத்ஜித் சிங்கின் மகன்) அவரது இரண்டாவது மனைவி லீலாவதி தேவி என்பவருக்கு இரண்டாவது குழந்தையாக பிறந்தார்.

தேராதூனின் தூன் பள்ளியில் கல்வி பயின்ற இவர், பின்னர் இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடத்தில் இராணுவப் பயிற்சிப் பெற்றார்.[3]

இராணுவப் பணி

தொகு

1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாக்கித்தான் போரின்போது, படைப்பகுதித் தலைவர் சுக்ஜித் சிங் லெப்டினன்ட் கர்னல் பதவியை வகித்தார். பசந்தர் போரில், டிசம்பர் 8ஆம் தேதி இரவு, படைப்பிரிவு பாக்கித்தான் எல்லைக்குள் நுழைந்து நைனான் கோட் அருகே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. டிசம்பர் 10 அன்று, பாக்கித்தான் படைகள் தாக்குதலை நடத்தின. அதை சுக்ஜித் சிங்கின் படைப்பிரிவு வெற்றிகரமாக எதிர்த்தது. ஒரே ஒரு பீரங்கி வண்டி மட்டுமே இழந்த பிறகு இவரது பிரிவு பாக்கித்தான் படையை பின்வாங்க கட்டாயப்படுத்தியது. அடுத்த நாள், நடந்த சண்டையில், இவரது படைப்பிரிவு எதிரிகளின் எட்டு பீரங்கி வண்டிகளை அழித்தது. மேலும் ஒரு சிலரை கைது செய்தது.

விருது

தொகு

பசந்தர் போரில் லெப்டினன்ட் கர்னல் சுக்ஜித் சிங்கின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான மகா வீர சக்கரம் விருது வழங்கப்பட்டது.[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "LT COL SUKHJIT SINGH MAHA VIR CHAKRA". Indian Army, Govt of India official website.
  2. "LT COL SUKHJIT SINGH MAHA VIR CHAKRA". Indian Army, Govt of India official website.
  3. "Release of Prince, Patron and Patriarch: Maharaja Jagatjit Singh of Kapurthala".
  4. "Brig Sukhjit Singh, MVC". The War Decorated India & Trust.
  5. "India-Pak tank warfare and Pak military's drawbacks". https://www.asianage.com/india/all-india/211217/india-pak-tank-warfare-and-pak-militarys-drawbacks.html. 
  6. "Rare case of courage of conviction". https://www.hindustantimes.com/chandigarh/rare-case-of-courage-of-conviction/story-yqIJxcnjK7hev214I750iL.html.