சுசிரோ அயாசி

நிகோங்கோ சுசிரோ அயாசி (சப்பானியம்: 林 忠四郎) [ஜூலை 25, 1920 - பிப்ரவரி 28, 2010] ஒரு ஜப்பானிய வானியற்பியலாளர். எர்ட்சுப்பிரங் - இரசல் விளக்கப்படத்தில் உள்ள அயாசித் தடங்கள் இவர் நினைவாகப் பெயரிடப்பட்டன.

சுசிரோ ஃஅயாசி
பிறப்பு(1920-07-25)சூலை 25, 1920
இறப்புபெப்ரவரி 28, 2010(2010-02-28) (அகவை 89)
கயோட்டோ, ஜப்பான்
தேசியம்ஜப்பான்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்கயோட்டோ பல்கலைகழகம்
கல்வி கற்ற இடங்கள்டோக்கியோ பல்கலைகழகம்
தாக்கம் 
செலுத்தியோர்
ஃஇடெக்கி யுகாவா
விருதுகள்எடிங்டன் பதக்கம், 1970
கயோட்டோ பரிசு, 1995
புரூசு விருது, 2004

இவர் 1942-ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். பிறகு இவர் இடேக்கி யுகாவாவின் கீழ் ஆய்வு உதவியாளராகக் கயோட்டோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். செவ்வியல் படிமமாகிய ஆல்பெர்–பீதே–காமோவ் ஆய்வின் அணுக்கருத்தொகுப்புப் படிமத்துக்கு கூடுதல் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.[1] இவரது மிகவும் பெயர்பெற்ற ஆய்வு விண்மீன் உருவாக்கத்தின் அயாசித்தடங்களைக் கண்டறிய உதவிய வானியற்பியல் கணக்கீடுகளாகும்.[2] இவை விண்மீனின் ஆரத்துக்கு வரம்புகட்டும் அயாசி வரம்பையும் விதித்தன.

இவர்மிகச்சிறிய விண்மீன்களான பழுப்புக் குறளைகளின் தொடக்கநிலை ஆய்வுகளை மேற்கொண்டார்.[3] இவர் 1984-ல் ஓய்வு பெற்றார்.

இவர் 1970-ல் எடிங்டன் பதக்கத்தையும் 1995-ல் கயோட்டோ பரிசையும் 2004-ல் புரூசு விருதையும் பெற்றார்.

சுசிரோ அயாசி கயோட்டோ மருத்துவமனையில், 2010-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் நாள் நிமோனியாக் காய்ச்சலால் இறந்தார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Hayashi, C. (1961). "Proton-neutron concentration ratio in the expanding Universe at the stages preceding the formation of the elements". Progress of Theoretical Physics 5 (2): 224–235. doi:10.1143/PTP.5.224. 
  2. Hayashi, C. (1961). "Stellar evolution in early phases of gravitational contraction". Publications of the Astronomical Society of Japan 13: 450–452. Bibcode: 1961PASJ...13..450H. 
  3. Hayashi, C.; Nakano, T. (1963). "Evolution of Stars of Small Masses in the Pre-Main-Sequence Stages". Progress of Theoretical Physics 30 (4): 460–474. doi:10.1143/PTP.30.460. Bibcode: 1963PThPh..30..460H. 
  4. Sugimoto, D. (2010). "Chushiro Hayashi 1920–2010". Astronomy & Geophysics 51 (3): 3.36. doi:10.1111/j.1468-4004.2010.51336.x. Bibcode: 2010A&G....51c..36S. 
  5. "Award-winning Japanese astrophysicist Hayashi dies at 89". Kyodo News. March 1, 2010. பார்க்கப்பட்ட நாள் March 1, 2010.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசிரோ_அயாசி&oldid=4025249" இலிருந்து மீள்விக்கப்பட்டது