சுசீலா கோபாலன்
சுசீலா கோபாலன் (29 டிசம்பர் 1929,- 19 டிசம்பர் 2001) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவராகவும், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். கேரள மாநில அமைச்சரவையில் பலமுறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும் இவர் ஆலப்புழா (1980) மற்றும் சிராய்க்குல் (1991) ஆகியவற்றிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரபலமான ஈழவ காளரி குடும்பத்தில் முகமாமாவில் சேரப்பாஞ்சிரியில் பிறந்தார், ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரத்தில் கல்வி கற்றார் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே. கோபாலனை திருமணம் செய்துகொண்டார்.[1]
சுசீலா கோபாலன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் ,தொழில் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், கேரளா | |
தொகுதி | ஆலப்புழா மற்றும் சிராயங்கில் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகமாமா, ஆலப்புழா, கேரளா | 29 திசம்பர் 1929
இறப்பு | 19 திசம்பர் 2001 திருவனந்தபுரம், கேரளா | (அகவை 71)
அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர் | ஏ. கே. கோபாலன் |
பிள்ளைகள் | லைலா கோபாலன் |
இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டமைப்பில் பிரதான பொறுப்புகள் வைத்திருந்த சில பெண்களில் ஒருவராக இவர் இருந்தார். கேரளாவில் எல்.டி.எப் அமைச்சரவையில் பல மூறை அமைச்சராக இருந்தார். கடைசியாக அவர் தொழில் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். சி.எம்.ஐ (எம்) மாநிலக் குழுவுக்கான தேர்தலில் ஈ.கே.நயனரிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், அமைச்சரவையில் அவர் தொழில் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக ஆனார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Love in time of struggles". தி இந்து. 2001-12-20 இம் மூலத்தில் இருந்து 7 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180107102536/http://www.thehindu.com/2001/12/20/stories/2001122003440300.htm.