சுசீலா சமத்

சுசீலா சமத் (Sushila Samad) அல்லது சுசீலா சமந்தா (இந்தி: सुशीला सामद) (7 சூன் 1906 - 10 திசம்பர் 1960) என்பவர் ஓர் ஆதிவாசி இந்திக் கவிஞர், பத்திரிகையாளர், ஆசிரியர், வெளியீட்டாளர் ஆவார். இவர் இந்திய சுதந்திர இயக்கத்தின் தீவிர அமைப்பாளராக இருந்தார். இவர் இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் உள்ள லௌஜோடா கிராமத்தின் முண்டா பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

வாழ்க்கை வரலாறு

தொகு

சமத், தாய் லால்மணி சாண்டில் மற்றும் தந்தை மோகன் ராம் சாண்டில் ஆவர். 1931-இல், சுசீலா சமத் பிரயாக்-மகிலா வித்யாபீடத்தில் முதல் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1932-இல் வினோதினி முடித்து விதுசி (இளங்கலை) கல்வியை 1934 இல் முடித்தார். இந்தியாவில் 'இந்தி விதுசி' ஆன முதல் ஆதிவாசி பெண் இவரே.[1]

1925 முதல் 1930 வரை, இவர் இலக்கிய-சமூக இதழான சாந்தினியைத் தொகுத்து வெளியிட்டார். இவர் காந்தியின் விடுதலை இயக்கத்தில் 'சுராஜி' (சுதந்திரப் போராளி) பங்கேற்ற ஒரே பழங்குடிப் பெண் . இவர் சட்டமேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[2] சமூக-கலாச்சார, இலக்கியப் பொறுப்புகளையும் இவர் நிறைவேற்றியுள்ளார். இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகள் பிரல்லப் (1935) மற்றும் சப்னே கா சன்சார் (1948).

மேற்கோள்கள்

தொகு
  1. (in இந்தி). {{cite book}}: Missing or empty |title= (help)
  2. (India), Bihar (1959). The Bihar Gazette (in ஆங்கிலம்). p. 546.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசீலா_சமத்&oldid=3892951" இலிருந்து மீள்விக்கப்பட்டது